Friday, February 1, 2019

இலவங்கம் - Lavangam மருத்துவப் பயன்கள்









இலவங்கம்



வளரியல்பு: மரம்


தாவர விளக்கம்: மலைப் பகுதிகளில் விளையும் தாவரம். மரத்தில் தோன்றும் மொக்குகளைப் பறித்து, காய வைத்து, கடைகளில் இலவங்கம் அல்லது கிராம்பு என்கிற பெயரில் விற்பனையாகின்றது. இது, எல்லா நாட்டு மருந்து மற்றும் மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். கறிமசாலாவில் முக்கியமாக இடம் பெறுவது. சுவையும், மணமும் தரும் இதை ஊறுகாய், பற்பொடி, வாசனைப் புகையிலை ஆகியவற்றிலும் சேர்க்கிறார்கள். இந்தியாவிலும், இலங்கையிலும், இலவங்கத்தின் மருத்துவ மற்றும் உணவு உபயோகங்களுக்காக பயிர் செய்யப்படுகின்றது. அஞ்சுகம், உறகடம், கருவாய், வராங்கம் போன்ற பெயர்களும் இலவங்கத்திற்கு உண்டு.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. பசித்தீயைத் தூண்டி, உடலைத் தேற்றும். இசிவையும், துடிப்பையும் தடுத்து வாந்தியை நீக்கவல்லது. மேலும், தோல் நோய்களையும் கட்டுப்படுத்த வல்லது. “ பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்”... என்கிறது அகத்தியர் குணபாட நூல். பித்தத்தைக் கட்டுப்படுத்துதல், விந்து ஒழுகுதல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றை குணப்படுத்துவதற்காக செய்யப்படும் மருந்துகளில் முக்கியமாகவும், லேகியம், சூரணங்கள் போன்றவற்றில் துணை மருந்தாகவும் இலவங்கம் சேர்க்கப்படுகின்றது.
இலவங்கத்தை வாலையிலிட்டு வடித்து இலவங்க எண்ணெய் அல்லது கிராம்புத் தைலம் பெறப்படுகின்றது. இது, நல்ல மணமுள்ளது. அழுகலை அகற்றும்; அரிப்பைத் தடுக்கும்; பசியைத் தூண்டும்; உடலைப் பலமாக்கும்.


பல்வலி, ஈறுவீக்கம் குணமாக

Ø  வலியுள்ள இடத்தில் இலவங்கப் பொடியை வைத்துப் பல் தேய்க்க குணம் கிடைக்கும் அல்லது இலவங்க எண்ணெயைப் பஞ்சில் தோய்த்து பல் வலியுள்ள இடத்தில் வைக்கலாம்.


தேள்கொட்டு விஷம் முறிய

Ø  இலவங்கத்தை நன்கு காய வைத்து, சூரணம் செய்து 1/4 தேக்கரண்டி அளவு, தேனில் மூன்று வேளைகள் உண்டு வர வேண்டும்.


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாக

Ø  இரண்டு கிராம் இலவங்கப் பொடியை, சம அளவு பனை வெல்லத்தில் கலந்து, மாதவிடாய் காலத்தில், 3 நாட்கள், காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும்.


மண்டைக்குத்தல், நீரேற்றம் கட்டுப்பட

Ø  இலவங்கத்தை நீர்விட்டு அரைத்து, நெற்றியிலும் மூக்கின் மீதும் பற்றாகப் போட்டு வரலாம்.


காய்ச்சலுக்குப் பிறகு ஏற்படும் களைப்பு நீங்க

Ø  4 கிராம்பும் 10 நிலவேம்பு இலைகளும் எடுத்து, நசுக்கி, நீரில் இட்டு குடிநீர் செய்து, 1 டம்ளர் அளவாகக் குடிக்க வேண்டும்.


Please Contact for Appointment