Saturday, January 19, 2019

அதிமதுரம் Athimathuram மருத்துவ பயன்கள்






அதிமதுரம்

வளரியல்பு : செடி காடுகளில் புதர்ச்செடியாகவும் வளரும்.

தாவர விளக்கம் : இயற்கையாக் மலைப்பகுதிகளில் விளைகிறது
தாவரம் 1 ½ அடி உயரமாக வளரும், இலைகள் கூட்டிலையானவை, ஊதா நிறமான சிறு பூக்கள் தண்டின் கணுக்களில் காணப்படும். காய்கள் 3 செ.மீ வரை நீளமானவை, சிறு முட்களுடன் காணப்படும். வேர்கள் கிளைத்தவை, இவை சிறிதும் பெரிதுமாக உட்புறம் மஞ்சள் நிறமாக வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாக் காணப்படும். வேர்களே மருத்துவத்தின் அதிகமாக பயன்படுகின்றன. மேலும் இவை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காஷ்மீர் பஞ்சாப் இமாச்சலப் பிரதேசம் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிமதுரம் வாணிப ரீதியாகப் பயிர்டப்படுகினறது. அதிங்கம் அஷ்டி மதூகம் இரட்டிப்பு மதுரம் ஆகிய் மாற்றுப் பெயர்களும் அதிமதுரதிதிற்கு உண்டு அதிமதுரம் நாட்டு மருந்துக் கடைகளில் காய்ந்த நிலையில் கிடைக்கும்.

ஸ்பெயின் இத்தாலி போன்ற நாடுகளில் நெல் வயல்களில் அதிமதுரமும் அடர்ந்த களைச் செடியாக வளர்கின்றது. பசுமையான இந்த செடியின்  வேர்களை சிறுவர்கள் பறித்து சுவைப்பார்கள்.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

இலைகள் இனிப்பு சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை.
வேர்கள் இனிப்பு சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. வேர் புண்கள் தாகம் அசதி கண் நோய்கள் விக்கல் எலும்பு நோய்கள் மஞ்சள் காமாலை இரும்ல் தலை நோய்கள் அகியவற்றைக் குணமாக்கும். காக்கை வலிப்பு மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் படர்தாமரை அகிஉஅவற்றையும் கட்டுப்படுத்தும்  முடியை வளர்க்கும் பண்பும் ஆண்மையைப் பெருக்கும் குணமும் கூட அதிமதுரத்திற்கு உண்டு. ஆயுளையும் அதிகரிக்க செய்யும்.

குறிப்புகீழ்வரும் பகுதியில் அதிமதுரம் எனக் குறிப்பிட்ப்பட்டுள்ளது அனைத்துமே அதிமதுரத்தின் காய்ந்த் வேர்ப்பகுதியே ஆகும்.

இருமல் கட்டுப்பட

Ø  அதிமதுரம் 50 கிராம் மிளகு 10 கிராம் ஆகியவற்றை எடுத்து கொண்டு இளவறுப்பாக வறுத்து தூள் செய்து கலந்து வைத்துக் கொண்டு 1 தேக்கரண்டி அளவு சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர வேண்டும் வறட்சி இருமல் குணமாகச் சிறிதளவு அதிமதுரத்தை வாயிலிட்டு ஊறவைத்து மென்றும் சாப்பிடலாம்.


வயிற்றுப்புண் குணமாக

Ø  50 கிராம் அதிமதுரத்தை இலேசாக இடித்து 1 ½ லி, தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். ¼ லி ஆக குறையும் வரைக் காய்ச்சி அத்துடன் 150 கிராம் சர்க்கரை 1/4லிட்டர் பால் ஆகியவை சேர்த்து பாகுபதம் வரும் வரை காய்ச்சி வடிக்க வேண்டும் சூடு அறிய பின்னர் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும், இதில் இரண்டு தேக்கரண்டி அளவு 1/2டம்ளர் வெந்நீரில் கலந்து தினமும் காலை மாலை வேளைகளில் 2 வாரங்களில் உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வரவேண்டும்.


காயங்கள் மற்றும் வெட்டுக்காயங்கள் குணமாக

Ø  தேவையான அளவு அதிமதுரத்தூளை நெய் சேர்த்து  பசையாக குழைத்து  பாதிக்கப்பட்ட இட்த்தில் பூச வேண்டும்.


நரம்புத் தளர்ச்சி கட்டுப்பட

Ø  ½ தேக்கரண்டி அதிமதுர பொடியை சிறிதளவு தேனுடன் குழைத்து காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் வரை சாப்பிட்டு வரவேண்டும்.


தலைவலி ஒற்றைத் தலைவலிக்கு அதிமதுரத்தூள்

Ø  அதிமதுரம் பெருஞ்சீரகம் சர்க்கரை சம அளவாக எடுத்துக் கொண்டு நன்றாக் தூள் செய்து கொள்ளவேண்டும் இதனை முதலுதவி மருந்தாக் 1 தேக்கரண்டி அளவு சிறிது வெந்நீருடன் சேர்த்து உள்ளுக்குச் சாப்பிடலாம்.




==--==

Please Contact for Appointment