Saturday, December 20, 2014

HELONIAS DIOICA - ஹெலோனிஸ் டையோகா





 HELONIAS DIOICA - ஹெலோனிஸ் டையோகா










HELONIAS DIOICA - ஹெலோனிஸ் டையோகா


இம் மருந்துக்குரிய பெண்கள் சுறு, சுறுப்பில்லாமல் மந்தமாக லேசாக உடல் உழைப்பை தரும் பெண்கள். கடினமான வேலை செய்து விட்டால் கருப்பை போன்ற ஏதோ ஓர் உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும். () மேலே சுருங்கி விடும். உடம்பும், மனசும் பலஹீனமாகவே இருக்கும். வெறுப்பூட்டுகின்ற அளவு தசைவலி மற்றும் எரிச்சல் இருப்பதால், தூக்கம் வருவதில்லை.

பின் மண்டை எல்லாம் நல்லாயிருக்கும், ஆனால் நோயின் போது அவர்களுக்கு சிந்திக்கவே முடியாது. உடன் CALC-PHOS, OXAL-AC.. எப்போதும் மனம் அமைதியற்று இருப்பதால் அங்கேயும், இங்கேயும் போய் கொண்டே இருப்பார்கள். இவர்களை யாராவது குறை சொன்னால் எரிச்சல் அடைவார்கள். எதையும், புரிந்து கொள்ளவு[ம், யோசனை செய்யும் சக்தியும் மிக குறைவு. பொருத்து கொள்ளவும் மாட்டார்கள். ANAC. மாதிரி. மனம் ஆழமாக சிந்தித்து மந்தம் ஆகிவிடுவார். அதனால் இவர்களுக்கு அடிப்படையாகவே வருத்தம் இருக்கும். சர்க்கரை வியாதியஸ்தர்களின் ஆரம்ப நிலையில் சிறுநீர் அதிகமாகவும், சுத்தமாக சர்க்கரை கலந்த மாதிரி போகும். உதடு வறண்டும், விரைத்தும் காணப்படும். அதிகமான தாகம் ஏற்படும். மனம் எரிச்சலோடு அமைதியின்றி உடம்பு இளைத்தும் காணப்படுவார்கள். சர்க்கரை வியாதி திடீர் வகையாகவும், நாட்பட்டதாகவும், சிறுநீர் போகும் போது அல்புமென் (முட்டை சத்து) காணப்படும். கருத்தரிக்கும் பெண்களுக்கு அல்புமென் (முட்டை சத்து) போவதால் ரொம்ப பலஹீனமாகவும், சோம்பேறி தனமாகவும், உற்சாகம் இன்றியும் இருப்பார்கள். காரணமின்றி வெறுப்படைவார்கள். இம்மருந்துக்குரிய பெண்களுக்கு கருப்பை வலிமையில்லாததால், மாதவிலக்கின் ஆரம்பத்திலிருந்து மிகவும் அதிகமாக போகும். அதனால் நோயாளி பலஹீனமாகவும், தளர்ந்தும் போய் இருப்பார்கள். இடைக்கால போக்கில் தான் வழக்கத்தை விட அதிகமாக போக்கு போகும். மார்பு வீங்கி, காம்பு வலியும், பல் வலியும் ஒரே நேரத்தில் ஏற்படும். உடன் CONIUM, LAC-C. இரத்தம் உறைந்து கட்டி, கட்டியாக கருப்பாக குபுக்குனு நாற்றத்துடன் வெளியேறும். அடிவயிற்று எலும்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு இருப்பதால் கவலைப்படுவார்கள். உடன் (LAPPA).. கருப்பை நகர்வது போன்ற உணர்வு அவர்களுக்கு இருப்பதால், வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். உடன் LYSS. இவர்களுக்கு கெட்ட நிகழ்ச்சியின் காரணமாக கருசிதைவும், கரு உற்பத்தியும் தடைபடும். உறவு மருந்துகளை ஒப்பிட்டு பார்க்கக் கூடியது. ALET, FER, LIL, PHOS- AC.

ஒற்றைக்குறி:- இளைப்பும்;, ஏதோ ஒரு உறுப்பு தொங்கி, தளர்ந்தும் இவர்களிடம் அதிகமாக இருந்தால் ALET. உண்ணும் உணவு உடலில் ஒட்டாமலும் போகும். இவர்களுக்கு ஏதோ ஒரு உறுப்பு பலஹீனத்தால் கீழே இறங்கி விடும்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment