Saturday, December 20, 2014

GLYCERINUM – கிளிசரினம்





 GLYCERINUM – கிளிசரினம்










GLYCERINUM – கிளிசரினம்

இதை பல நிலைகளில் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக சினிமாத் துறையில் கண்ணீர் வருவதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த மருந்து நீடித்து, ஆழ்ந்து வேலை செய்யக்கூடிய மருந்து. இது புதிய திசுக்களை உற்பத்தி செய்யும். அதனால் உடல் இளைப்பிற்கு இது நல்ல மருந்து. மனம் மற்றும் உடல்களில் நன்றாக வேலை செய்யும். மனமும், உடலும் இளைத்துள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல மருந்து. உடல் இளைத்ததையே திரும்ப, திரும்ப கூறுவார்கள். முதல் நிலையில் இந்த குறி தெரியாது. 2 வது நிலையில் நன்குத் தெரியும். இவர்கள் பொதுவாக உடல் இளைப்பைத் தான் கூறுவார்கள். தலை நிரம்பி இருப்பது போலவும். மனம் எங்கும் அலைவது போலவும், குழப்பமாகவும் இருப்பார்கள். இவர்கள் பலவிதமான வலிகளைப் பற்றிக் கூறுவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இப்படி ஏற்படும். குறிப்பாக மாதவிலக்கிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வலிகளைப் பற்றி சொன்னால் இது தான் முக்கிய மருந்து. பின் மண்டையில் நிரம்பிய மாதிரி இருக்கும். மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் ஏதோ உறுத்திக் கொண்டிருக்கும். தண்ணி மாதிரி ஒழுகும். புழு ஊறுவது போன்ற அதிகமான உணர்;வு. சளி சீதலமாட்டம் வரும். சளி ஜவ்வு மாதிரி கெட்டியாகி விடும். மூக்கின் உள்ளுறுப்பு இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். மார்பு:- மார்பில் எக்கி, எக்கி இரும்பல் வரும். இதனால் பலஹீனம். இவர்களது மார்பு ஏதோ நிரம்பி மேலே தூக்கிக் கொண்டிருக்கும். மற்றும் இம்புலின்சியா, நிமோனியா நோயாளிகளுக்கு இப்படி இருக்கும். நுரையீரல் குழல் மற்றும் பையின் மீது மூடியுள்ள தோளில் ஏற்படும் தொல்லைகள். வயிறு :- இரைப்பையிலிருந்து சிறுகுடல் வரை ஏதோ எரிந்து கொண்டும் போகும். அடிக்கடி சிறுநீர் நிறையப் போகும். அந்த அளவுக்கு சிறுநீர் உற்பத்தியாகும். விசேஷமான குறியாக அதிக இனிப்பை விரும்புவார்கள். சர்க்கரை வியாதியும் இருக்கும். பெண்:- நீண்ட நாட்களாக ஏராளமாக கொட்டிக் கொண்டேயிருக்கும் மாதவிலக்கு. இதனால் கர்ப்பபை இறங்கியது போலவும், பாரமாகவும் இருக்கும். இவர்களுக்கு ரொம்பக் களைப்பாகவும் இருக்கும். இந்த நேரத்தில் கைக்கால்களில் வாத நோய் ஏற்பட்டது போல இருக்கும். இது திரும்ப திரும்ப வரும். இவர்களது பாதம் ரொம்ப வலியாக இருக்கும். தொட்டால் சூடாக இருக்கும். பெருத்தது போன்ற உணர்வும் இருக்கும். உறவு மருந்துகள்:- CALC-C, GELS, LACTIC-ACID. குறைந்த வீரியம் நல்லது.






 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment