CALCAREA PHOSPHORICA - கல்கேரியா பாஸ்பாரிகா
கால்சியமும், பாஸ்பேட்டும்.
மிக வேகமாக வளரும் சிறுவர்கள். சதைக்கு பதிலாக எலும்பு வளரும். ரெட்டை, ரெட்டையாக பல் முளைக்கும். பெரிய சத்தத்துடன் மலக்காற்றுடன் பேதியாகும். கொஞ்சம் நேரம் கூட நிற்க முடியாது, ரிக்கட்ஸ் நோய் அதனால் முதுகு தண்டு, கழுத்து, எலும்பு, பற்கள் போன்றவை தாறுமாறகவும், எலும்பு வளர்ச்சி குச்சி மாதிரியும், உயரமாகவும், வேகமாகவும் வளரும். இளைஞர்கள் காதல் தோல்வியின் போதும், நோயின் போதும், வருத்தத்திலும், கவலையிலும் (விசனம்), குளிர்காற்று, பருவம் மாறுதல் போன்ற காலங்களிலும், மாணவிகளின் தலைவலிக்கும் இது போன்ற தொல்லைகளுக்கும் இது பொருந்தும். ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் வயிற்று வலி என்பார்கள். எலும்பு பலம் இல்லாத காரணத்தினால் தான் ரிக்கட்ஸ் நோய் தோன்றுகிறது. இளைஞர்களுக்கு கூன் விழுவதற்கும் இது தான் காரணம். பெண்:- மாதவிலக்கு சீக்கிரமாக, அதிகமாக, சிவப்பாக, கொழ, கொழன்னு போகும். இதேயிடத்தில் இளம் பெண் (அதாவது) மாணவி மாதிரி உள்ள பெண்களுக்கு தாமதம் ஆகவும், கருப்பாகவும் இரத்த போக்கும் இருக்கும். ஏதோ சில நேரம் மட்டும் முதலில் சிகப்பும், மறுபடியும் கருப்பாகவும் போகும். ஆனால் முதுகு வலி மிக பயங்கரமாகயிருக்கும். குழந்தை பால் குடித்து கொண்டிருக்கும் நேரத்தில் தாங்க முடியாத காம உணர்வு இருக்கும். அரை பைத்தியம் ஆகி விடுவார். முறையற்ற வழியில் தேய்த்து இன்பம் பெற்று கொள்ளுவதால் கருப்பை பலஹீனம் ஆகிவிடும். (உறுப்பு மட்டும் பலஹீனமாகி விட்டால் PLAT.) அதிக நாட்களாக பால் கொடுத்து கொண்டிருக்கும் தாயிக்கு, முட்டையின் வெள்ளை கரு மாதிரி வெள்ளைப்படும். காலையில் தாய் பால் கொடுக்கும் போது உப்பு கரிக்கும் பால். அதனால் குழந்தை பால் குடிக்காது. அதனால் பெண் மெலிந்து, இளைத்து, முதுகு வளைந்து காணப்படுவார். குறிபபு:- வேகமான எலும்பு வளர்ச்சி, உயரம், முதுகு தண்டு கூன் விழுதல், இளைஞர்களுடைய வேகமான வளர்ச்சிக்கு ACID- PHOS. இதுவும் இதே இடத்தில் பொருந்தி வருகிறது பார்த்து கொள்ளவும். ACID - PHOS ஸில், மாதவிலக்கு முன்னதாக தோன்றி ஏராளமாக கொட்டும், வயிறு ஈரலில் வலிக்கும். மாதவிலக்கு பிறகு மஞ்சளாட்டம் வெள்ளை படும். குறைந்த பால் சுரக்கும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------