Wednesday, December 17, 2014

BACILLINUM - பேசிலினம்





 BACILLINUM  - பேசிலினம்







BACILLINUM –பேசிலினம்


இவர்கள் கோபமாகவே இருப்பார்கள். யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருப்பார்கள். மற்றும் சுறு, சுறுப்பானவர்கள். எளிதில் கோபப்படுதல். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைதல், சிடு, சிடுப்பானவர்கள். தன்னை தாழ்த்த பட்டு விட்டது போல் எண்ணமும், மன சோர்வும், அனால் பித்து பிடித்தது போல் இருப்பார்கள். கோப்படுதல், பின் அதை நினைத்து வருந்துதல், வருத்தத்தை வெளிப்படுத்தும் போது ஊளையிடுதல், எதற்க்கெடுத்தாலும், பயந்து கொள்ளும் மனநிலை, விசேஷமான குறியாக வெறுப்பும் இருக்கும், கடுமையான தலைவலியின் போது ஒரே எண்ணம் திரும்ப, திரும்ப வரும். ஓய்வில் () அமைதியாக இருக்கும் போது தலையை இழுத்து பிடிப்பது போல இருக்கும். தலையை ஆட்டினால் தொல்லைகள் அதிகமாகும். அவனுக்கு பயங்கரமான தலைவலி, மற்றும் தலையை ஒரு இரும்பு வளையத்தால் இருக்கி கட்டடியது போல் இருக்கும். தலை நடுக்கம், முதுகு எலும்பில் ஈரம் படுவது போல் ஓர் உணர்வு இருக்கும். சுத்தமாகவே தூக்கமின்மை, மூளைச் சவ்வுகளில் வேக்காடு, தலைப்பகுதியில் படர் தாமரை மற்றும் குறிப்பிட்டப் பகுதியில் முடிக் கொட்டுதல், கண் இமைப்பகுதியில் சிரங்கு, கொப்புளம் தோன்றும். முகத்தில் ஒரு வகை புண் ஏற்படும். வலி இருக்காது, ஆனால் சீக்கிரமாக குணமாகாது. முகப்பருக்கள் தோன்றும். பல வாரங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். பற்களில் இடைவிடாத வலி. முக்கியமாக எந்த சத்தம் கேட்டாலும் கீழ் வெட்டும் பற்களில் வலி. அப்போது பற்களில் அதிகமான உணர்ச்சி அதிகரித்தல். () கீழ் உதடு பிதுங்கி விடுதல், காற்று பட்டாலும் ரொம்ப உணாச்சி வயப்படுதல், தூக்கத்தில் பற்களை அரைத்தல், சத்து குறையுள்ள பற்கள் வளரும். மேல் தொண்டையில் கிச்சு, கிச்சு செய்வது போல் இருக்கும் இரும்பலின் போது தொண்டையை இழுத்து பிடிக்கும். வயிறு அஜீரணமாகி காற்று பிரியும், உடன் வலது விலா எலும்பு பகுதி அடி பகுதியில் வலி ஏற்படும், இரவில் மட்டும் காய்ச்சல், உடல் மெலிவு, அடிவயிற்றை சுற்றிலும் வலி, நிம்மதியின்மை, இரண்டு தொடை இடுக்கிலும் உள்ள சுரப்பிகள் பெருத்து விடுதல் மற்றும் கடினமாகி விடுதல், தூக்கத்தில் கத்துதல், நாக்கு சிவந்து இருக்கும், அப்பன்டிஸிஸ் பகுதியில் வீக்கம். இது குழந்தை பருவ (PRIMARY COMPLEX) நோய்களில் ஒன்று. தூக்கத்தில் பேசுதல். சாப்பாட்டின் மீது விருப்பம் குறைதல். கைகள் நீல நிறமாகி விடுதல், எல்லா இடங்களிலும் உள்ள சுரப்பிகள் கடினமாகி விடுவது நன்றாகவே தெரியும். மண்ணீரல் பகுதியின் வெளிபுறத்தில் வீங்கி விடும், அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிட விரும்புதல், நாள்பட்ட பேதி, காலையில் சாப்பிடுவதற்கு முன் பேதி மற்றும் குமட்டல், குடல்களில் அதிகமான இரத்த ஓட்டம் பாய்தல். மலச்சிக்கலாகவே இருத்தல், அதிகமாக காற்று பிரிதல், உடன் பயங்கரமான நாற்றம். மூல வியாதியின் போது மூலத்தை கூரானப் பொருளால் குத்த விரும்புதல், சிறுநீர் அளவுக்கு அதிகமாக வருதல், சிறுநீர் வெளுத்தது போலவும், வெள்ளை நிறமாகவும், வண்டலாகவும் வரும். குறிப்பாக இரவு நேரங்களில் இது போன்ற சிறுநீர் வெளியேறும். சிறிதளவு தொந்தரவு ஏற்பட்டாலும் மூச்சு வாங்குதல், மூச்சு விட கஷ்டமாகிவிடும், ரொம்ப வறட்டு இருமல், இதில் நோயாளியே நடுங்கி விடுவார். ரொம்ப நேரம் தூங்கி கொண்டு இருத்தல். அதனால் கண் விழிக்கவே முடியாது (ஆண்களுக்கு திடீரென இரும்பல். அப்போது குரல் வளையை கூரான பொருளால் குத்துவது போல் இருக்கும். காலையில் படுக்கையிலிருந்து எழும் போது ஒரு சில இரும்பல். இரவில் நடக்கும் போது இரும்பல் (ஆண்களுக்கு). இரும்பும் போது சளி வெளி வருதல், தண்ணியாட்டம் சளியும் தானாக வெளி வரும். பிறகு கெட்டியான சளியும் வெளி வரும். இவ்வாறு சளி வந்த பிறகு அவர்கள் பேசினால் சுத்தமான் மணியோசை போல் பேச்சு வரும். சுவாசிக்கும் போது இடது தோள்பட்டை எலும்பில் வலி. படுத்தால் வலி அதிகரித்தல். வெது, வெதுப்பில் சுகம். கழுத்து பகுதியில் உள்ள சுரபிகள் பெருத்து விடுதல் மற்றும் மிருதுவாகிவிடும். நடந்து கொண்டிருந்தால் இடது மூட்டில் வலி, வலியை தாங்கி கொண்டு விடா முயற்சியுடன் சிறிது தூரம் நடந்தாலும் வலி. கால் மூட்டுகள் கெட்டு வீங்கி விடும். அதிகமான உடல் சோர்வு, தொந்தரவு செய்யாமல் இருந்தால் சுகம். நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக தூங்கி கொண்டிருத்தல், இரவில் தூக்கமின்மை, அதிகமான கனவுகள், காய்ச்சல் உடல் முழுவதும் பரவும்;. (நாம் ஒரு வேளை மருந்து கொடுத்தால் மேலும் காய்ச்சல் அதிகமாக பரவும்.) கொஞ்சம் வியர்வை வரும். தாங்க முடியாத அளவு தலைவலி ஏற்படும்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment