Friday, December 12, 2014

AMMONIUM CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்





 AMMONIUM  CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்




AMMONIUM  CARBONICUM - அம்மோனியம் கார்போனிகம்

AMMONIUM  CARBONICUM. அம்மோனியம் கார்போனிக்கம்காரமான, நாற்றமான உப்பு.
              
இம் மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பொருந்தும்.  தங்கள் விஷயங்களை மூடி மறைக்கும் இயல்புடைய பெண்கள்.  அடிக்கடி அழுகின்ற குணம் உடைய பெண்கள்.  மாத விலக்கு யோனியில் வருவதற்கு பதிலாக, வாய், மூக்கு, ஆஸன வாய் போன்ற உறுப்புகளில் இவர்களுக்கு கருப்பு நிறமான கட்டி, கட்டியான, கடுமையான நாற்றத்துடன், காரத்தன்மை வாய்ந்த இரத்தம் கொட்டும். இவர்கள் தானாகவே பேசிக்கொண்டும் (அ) பினாத்திக்கொண்டும் போவார்கள், வருவார்கள்.  
 
மூக்கடைப்பு  ஏற்படும், நள்ளிரவில் ஏற்பட்டு படுக்கையில் துள்ளி எழுவார்கள்.  தலைவலியானது தலை சிதறுவது போலவும், பயங்கரமாகவும், பட்டு, பட்டுன்னு அடிக்குது என்பார்கள்.  வெடிக்கிற மாதிரி என்றால் GLONE.  அழுத்தி பிடித்தாலும் சூடான அறையில் இருந்தாலும் கொஞ்சம் நல்லாயிருக்குது என்பார்கள்.  காலையில் எழுந்தவுடன் முகம் கழுவும் போது மூக்கில் கைப்பட்டவுடன் தானாகவே இரத்தம் கொட, கொடன்னு இரத்தம் கொட்டும்.  இப்படி எங்கு கொட்டினாலும் ஒரே மருந்து இது தான்.  சில்லி மூக்கு உடைப்புக்கு நல்ல மருந்து.  மூக்கு, வாய், டான்சில் யோனி போன்ற பகுதிகளில் தோல் உறிந்து, உறிந்து புண்கள் சுருண்டு கொண்டே வரும்.  நக சுற்றுக்கு நல்ல மருந்து.  உடம்பில் மக்காசோளம்  போல மருவு உருண்டை, உருண்டையாக இருந்தால் இது நல்ல மருந்து.  
 
பூச்சிக்கடி, தேனீ, தேள் போன்றவைகள் கொட்டிய பிறகு அங்கு கருப்பு நிற இரத்தம் கட்டிக் கொண்டால் இதுதான் மருந்து.  சளி, பேதி, எச்சில், வெள்ளைபாடு, தீட்டு போன்றவைகள் மிகுந்த காரத்தன்மையுடையது.  ஆனால் பெண் கூறுவாள் தீட்டு, வெள்ளைபாடு, தொடையில் பட்டால் புண்ணாகுது, தோல் உறியுது என்பாள்.  நுரையீரல் கணத்திற்கு இது நல்ல மருந்து.  டாக்டர் கென்ட் குறிப்பில் பார்த்துக்கொள்ளவும்.  
 
இரவு நேரத்தில் சளி, சூடான அறையில் இருந்தால் சுகம் என்பார்கள்.  அடிப்பட்ட பிறகும் பயந்ததிலிருந்தும் கருப்பு நிறமான இரத்தம் உறையாமல் வந்து கொண்டேயிருந்தாலும், மாத விலக்கு சட்டி கழுவிய தண்ணியாட்டம் வந்து கொண்டேயிருக்கிறது என்றாலும் இதுதான் மருந்து.  இதன் குணம் கருப்பு நிற இரத்தம், மற்றும் கட்டி, கட்டியாக, உடன் கழிவு பொருட்கள் காரத்தன்மையும், பட்டயிடதத்தில் புண்ணாக்கி தோல் உறிய செய்யும்.  இதே மாதிரி சுத்த சிவப்பு என்றால் IPECAC.   


முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment