கேள்வி: மதிப்பிற்குறிய டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 28 வயது பெண் நான், எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது, வாரம் ஒருமுறை உடலுறவு கொள்கிறோம். இதுவரை குழந்தையில்லை. அவருக்கு விந்து முந்தி வரும் பிரச்சனை இருக்கிறது. மேலும் அவருக்கு விரைப்புத்தண்மை குறைபாடும் இருக்கிறது.
எனக்கு என்ன பிரச்சனை என்றால் நான் இதுவரை ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடந்ததே இல்லை. ஆர்கசம் என்றால் என்ன என்றுகூட உணர்ந்ததில்லை.
ஆர்கசம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது? குழந்தை பிறக்க ஆர்கஸம் அவசியா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் டாக்டர்.
Am 28 years old married women, still I don’t have any
kids, we have sex weekly once, Am not experiencing orgasm till now, My husband
suffer with pre mature ejaculation and erectile dysfunction. How can I feel the
orgasm? Please explain doctor
மருத்துவர் பதில்: பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பலருக்கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்தால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.
சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது.
ஆர்கஸத்தை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும், உடலை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது ஆர்கஸத்தை முழுமையாக அடையவும், செக்ஸ் உறவின் இன்பத்தை முழுமையாக அனுபவிக்கவும் உதவும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும், மேலும், செக்ஸ் உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகமாவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம். முன்பை விட தாங்கள் மிகுந்த இன்பத்தை அனுபவிப்பதாகவும் இதை அனுபவித்த பெண்கள் கூறுகிறார்கள்.
ஆர்கசம் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கிய ஆலோசனை படி இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல மாற்றங்களை உணர்ந்ததாக கூறுகின்றனர்.
நிறைய பேர் முன்பை விட அதிக அளவிலான இன்பம், செக்ஸ் உறவின்போது கிடைத்ததாக கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி செய்வதால் உடல் மட்டும் ஆரோக்கியமாக இருப்பதில்லை மாறாக பெண்களின் செக்ஸ் வாழ்க்கையும் கூட சிறப்பாக, சீராக அமைகிறது. இன்பத்தை முழுமையாக அனுபவிக்க அவர்களுக்கு எளிமையான வழி கிடைக்கிறது .
ஆர்கஸத்தை அடைவதற்கு உடற்பயிற்சி ஒரு வழி. இது போக மேலும் பல வழிகளும் உள்ளன.
செக்ஸ் உறவின்போது பெண்களுக்கு எந்த பொசிஷன் வசதியாக உள்ளதோ அந்த பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும். அதை விட்டு கணவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வசதிக்குறைவான பொசிஷனில் உறவு கொள்ளும்போது, அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி, ஆர்கஸம் வராமல் செய்து விடும்.
உடல் உறவின்போது மனதை லேசாக வைத்துக்கொள்வது அவசியம். நாம் உறவு வைத்துக்கொள்ளும் இடமும் அதேபோல முக்கியமானது. மனதுக்குப் பிடித்தமான, செளகரியமான இடத்தில் உறவு இருப்பது போல அமைத்துக் கொள்வதன் மூலம் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும், பதட்டமும் குறையும். அதை விட்டு விட்டு கிடைக்கிற இடத்தில் என்று போய் விட்டால் அது இன்பத்தை முழுமையாக அனுபவிக்க விடாமல் செய்து வி்டும்.
உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள், நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள்.அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு உதவி செய்யும். கற்பனை என்பதே ஆர்கசதை தூண்டுவிக்கும் ஒரு சாதனம் போன்றதுதான்.
உறவின்போது உங்களது கவனம் செக்ஸில் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். திசை மாறி செல்ல விட்டு விடாதீர்கள். அந்த சமயத்தில் வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இருக்கக் கூடாது. உறவின்போது அதில் மட்டுமே முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் கவனம் முழுக்க உறவிலேயே இருக்கும், உணர்வுகளும் தடங்கலின்றி பொங்கிப் பெருகும். உண்மையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.
உணர்வுகளைத் தூண்டுவிக்கவும், செக்ஸ் ரீதியான மூடுக்கு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது, வீடியோ பார்ப்பது, இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்வது போன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை. அதேசமயம், அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்கக் கூடாது. அதைப் பார்த்து உங்களது மூடை தயார் செய்ய அது ஒரு கருவியாக இருக்கலாம், அவ்வளவுதான்.
உறவுக்கு முன்பு கணவரும், மனைவியும் சேர்ந்து ஜாலியாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது அவசியம். அந்தப் பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது அதை விட அவசியம். இருவரும் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படும் வகையில் பேச்சுக்கள் இருக்க வேண்டும். சின்னச் சின்ன விளையாட்டுக்கள், முத்தங்கள், உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும். அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் நீங்கள் நிச்சயம் ஆர்கசத்தை உணரலாம்.
மேலும் உங்களின் கணவருக்கு விந்து முந்துதல் பிரச்சனையும், விரைப்பு தண்மை குறைபாடும் உள்ளதாக கூறியுள்ளீர்கள்.
இதற்கு சிகிச்சையும் ஆலோசனையும் முறையாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்., நீங்களும் ஆர்கசத்தை அடைவதற்கு இது நல்ல வழி வகுக்கும்.
எனவே இருவரும் தயங்காது மருத்துவரை நேரில் ஆலோசித்து தகுந்த சிகிச்சை பெற்றால் இருவரும் பூரண சுகம் பெற்று குழந்தை பாக்கியம் பெறலாம்.
வாழ்த்துக்கள்,
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==