Thursday, November 13, 2014

தேவையற்ற அபார்ஷனை தவிர்க்க...? அடிக்கடி அபார்ஷன் செய்வதால் ஏற்படும் விளைவுகள்....? How to avoid unwanted abortions? Effects of abortions




 abortion treatment specialist, அபார்ஷனை தவிர்க்க,  அடிக்கடி அபார்ஷன் செய்வதால் ஏற்படும் விளைவுகள்





தேவையற்ற அபார்ஷனை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?.
Ø  திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்ளும் முறையற்ற உறவை தவிர்க்க வேண்டும்.

Ø  ஆணாக இருந்தால் ஆணுறை அணிந்து கொண்டோ, பெண் பெண்ணுறை அணிந்தோ செக்ஸில் ஈடுபடலாம்.

Ø  கணவன் மனைவியாக இருந்தால் முதல் குழந்தை பிறந்தவுடன் காப்பர்-டி அணிந்து தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்.


Ø  நார்மல் டெலிவரி என்றால் பத்து நாட்கள் கழித்தும், சிசேரியன் டெலிவரி என்றால் மூன்று மாதம் கழித்தும் காப்பர்-டி அணிவது நல்லது.  திரும்பவும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் காப்பர்-டியை எடுத்துவிட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

Ø  காப்பர்-டி அணிந்து கொள்ளாத பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

Ø  மாதவிடாய்க்கு - பீரியட்ஸ் பிறகு முதல் ஏழுநாட்களும் கடைசி ஏழு நாட்களும் கரு உருவாகும் வாய்ப்புக் குறைவு. எனவேதான் கரு உருவாகும் வாய்ப்பு அதிகமுள்ள அந்த இடைப்பட்ட 21 நாட்களில் காலத்தில் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Ø  தொடர் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட முடியாதவர்கள் "அவசரநிலை கருத்தடை மாத்திரை" Emergency Contraceptive  Pill” களை செக்ஸ் வைத்துக்கொண்ட 24 மணிநேரத்துக்குள் போட்டுக் கொண்டால் கரு உருவாவதைத் தடுத்துவிடலாம்.

Ø  இன்ஜெக்க்ஷன் மூலம் செலுத்தப்படும் கருத்தடை மருந்து வந்து விட்டது. அதை உடம்பினுள் செலுத்திக் கொண்டால் அதிலுள்ள கருத்தடை மருந்துகள் இரத்தத்தில் கலந்து கருத்தரிப்பை தடுக்கும்.

Ø  நிரந்தரமாக கருத்தரிப்பு ஏற்படாமல் இருக்க... ஆண்களுக்கு "வேசக்டமி Vasectomy  - ". பெண்களுக்கு "ட்யூபக்டமி - Tubectomy" என குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனை செய்து கொள்வது சிறந்த வழி.

Ø  பெண்களைவிட ஆண்களுக்குச் செய்யும் வேசக்டமி ஆபரேஷன் மிக மிக சுலபமானது.  ஆண்கள் இந்த ஆபரேஷன் செய்து கொள்வதால் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. வழக்கம்போல் மனைவியோடு இல்லற வாழ்க்கையை இன்பமாக ஆக்கிக் கொள்ளலாம்.

இப்படி பல வழிகள் இருந்தும் இதையெல்லாம் முறையாக கடைப்பிடிக்காமல் அபார்ஷன் என்ற நிலைக்கு திருமணமான பெண்களைவிட திருமணமாகாத இளம் பெண்கள் அபார்ஷன் அபாயத்துக்குத் தள்ளப்படுவதுதான் மிகவும் கொடுமையானது.


அடிக்கடி அபார்ஷன் செய்வதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
v  அடிக்கடி அபார்ஷன் செய்துகொள்ளும் பெண்கள் தொற்று நோய்க்கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.

v  சில நேரங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும்.

v  சிறுநீரகப்பாதையில் அழற்சி ஏற்படுவதோடு வலியும் அதிகரிக்கும்.

v  சில சமயங்களில் பெலோபியன் ட்யூப்களில் - Block in Fallopian Tube  அடைப்பு ஏற்பட்டு வருங்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம். அதனால்தான் முதல் குழந்தையை அபார்ஷன் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு அபார்ஷன் என்கிற நிலைக்குப் போகலாம்.

v  கருத்தடை மாத்திரைகளில் அதிகமான ஹார்மோன்கள் இருப்பதால் அதை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உடல் பருமன் அதிகரிக்கும். உடலில் நீர் கோத்துக் கொள்ளும். அதிக படபடப்பு, மனநிலை பாதிப்புகள், இடைப்பட்ட உதிரப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதோடு கேன்சர் வரும் அபாயமும் அதிகம்.

v  காப்பர்-டியை பயன்படுத்துவதால் அதிகப்படியான உதிரப்போக்கு, வலி, கிருமித் தொற்றுகள் ஆகியவை ஏற்பட்டு அவதிப்பட வேண்டியிருக்கும்.

v  இன்ஜக்டபுள் ஊசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு எடை அதிகரித்து விடும். பயம், படபடப்பு, டென்ஷன், எப்போதும் பதட்ட நிலையிலேயே காணப்படுவார்கள். அதுவும் திருமணமாகாத பெண்ணாக இருந்தால் இந்த பாதிப்புகளோடு சேர்ந்து சமூகரீதியாகவும் மனரீதியாகவும் பிரச்சினைகள் உண்டாகும்.

அபார்ஷனை தவிர்க்க
ü  திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் கருத்தரிப்பு நல்லது. இது பண்பாடு மட்டுமல்ல; இளைய சமுதாயங்களின் உடல் நலத்தில் கொண்டுள்ள அக்கறையும் கூட.
ü  சிற்றின்பம் முக்கியம்தான். அதை திருமணத்துக்குப் பிறகு முறையாக வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவின்மூலம் பேரின்பமாக்கிக் கொள்ளலாம்.
ü  தவிர்க்க முடியாதவர்கள் எந்த ஒரு பாதிப்பும் இல்லாத தரமான காண்டம் உபயோகித்துக்கொள்ளலாம்.








மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







==--==

Please Contact for Appointment