சீரகம்
சீரகம் வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும், மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப்பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anti helminthic against in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவப் பயன்கள
1. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
3. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
4. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
5. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
6. வாரம் ஒரு முறை இதைச் சாப்பிடலாம். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
7. திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
8. சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
9. அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.
10. சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

11. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
13. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
14. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
15. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்
16. சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
17. சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
18. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
19. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
20. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,
பசியின்மை, வயிற்றுப்பொருமல்,சுவையின்மை,நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
21. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
22. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
23. தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும். விக்கலை நிறுத்தும்.
24. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
15. " ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்து"
செய்முறை :
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.
மந்த வயிற்றுக்கான அறிகுறி கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பாக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்பு தீரும்.
==--==