கருத்தரித்தலை தவிர்க்கும் கருத்தடை சாதனங்களும் மற்ற சில வழிகளும். Contraceptive methods and devices,
கருத்தடை என்றால் என்ன? What is mean by contraception
¬ கருத்தடை என்பது, கருத்தரிப்பதைத் தடை செய்யும் முறையாகும்.
ஹார்மோன் முறை - Hormone method
¬ கருத்தடை மாத்திரைகளோ, ஊசிகளோ (வாய் வழியாக எடுத்துக் கொள்ளப்படுவது) மற்றும் ஈஸ்ட்ரோஜன் அல்லது புரோஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்கள் அடங்கியது. இந்த ஹார்மோன்கள் பெண்களுடைய சினைப்பையிலிருந்து மாதாமாதம் வெளிவரும் கருமுட்டையைத் தடை செய்து விடும். தவிரவும், இந்த முறையினால் கருப்பையின் வாய்ப்பகுதியில் இருக்கும் வெள்ளைச் சளி போன்ற டிஸ்சார்ஜ் தடிமனாகி, விந்து கர்ப்பப்பைக்குள் நுழையாமல் தடை செய்துவிடும்.
¬ சில நாட்கள் வரை குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு கருத்தடை மாத்திரைகள் மிகச் சிறந்த வழி.
¬ கருத்தடை மாத்திரை சாப்பிடும் பெண்கள் அதை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின்படி தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
¬ கருத்தடை ஊசி ஒன்று இருக்கிறது. அது 3 மாதங்களுக்கு கர்ப்பத்தைத் தடுக்கும். இதனால் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த ஊசியை எடுத்துக்கொள்ளலாம்.
ஆணுறைகள் - Condoms
¬ எச்.ஐ.வி, ஹெப்படைடிஸ் போன்ற செக்ஸ் வழியாகப் பரவும் வியாதிகளைத் தடுப்பதில் இந்த ஆணுறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. தரமான ஆணுறையை பயன் படுத்த வேண்டும்.
காப்பர் டி கருத்தடைச் சாதனம் Copper T Device
¬ இது ஒரு சிறிய பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. அதன் மேல் காப்பர் (அ) ஹார்மோன் இருக்கும். இதை கருப்பைக்குள் வைப்பார்கள். இந்த காப்பர் (அ) ஹார்மோன் கர்ப்பப்பைக்குள் இருப்பதனால் கருத்தரிக்காது. அப்படி கருத்தரித்தாலும் கர்ப்பப்பைக்குள் நிற்க விடாது. இந்த கருத்தடைச் சாதனத்தை அதன் டைப்பைப் பொறுத்து 3 முதல் 5 வருடங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். இந்த முறை ஏற்கெனவே குழந்தை பிறந்தவர்களுக்கு மிகவும் ஏற்றது.
பாதுகாப்பான நாட்கள் - சேஃப்டி பீரியட் – Safety Periods
¬ கருத்தடை முறையில் இந்த முறைதான் இயற்கையான குடும்ப கட்டுப்பாட்டு முறை. இந்த முறையில் எந்த கருத்தடைச் சாதனத்தையும், கருத்தடை மாத்திரைகளையும், ஊசிகளையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. கருத்தரிப்பதைத் தடைசெய்ய வேண்டுமென்றால், பீரியட்ஸ் தொடங்கிய முதல் நாளிலிருந்து 7 நாட்கள் வரை உறவு கொள்ளலாம். மற்றும் அடுத்த மாத பீரியட்ஸ் வருவதற்கு முந்தைய 7 நாட்களும்தான் "பாதுகாப்பான நாட்கள்" என்று அழைக்கப்படுகிறது.
¬ இந்த கருத்தடை முறை பீரியட்ஸ் ரெகுலராக இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான் பொருந்தும்.
கருத்தடை ஆபரேஷன் – Vasectomy & Tubectomy
¬ இந்த கருத்தடை முறையில், விந்தணு அல்லது கருமுட்டையை எடுத்துக்கொண்டு செல்லும் கருக்குழாய்களை ஆபரேஷன் மூலம் மூடி விடுவார்கள். இந்த ஆபரேஷனைச் செய்து கொண்ட ஆணோ அல்லது பெண்ணோ பிறகு எப்போதுமே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.
¬ இதில் ஆணுக்குச் செய்யும் ஆபரேஷன் பெண்ணுக்குச் செய்யும் அறுவை சிகிச்சையைவிட சுலபமானது. இந்த சிகிச்சையினால் ஆண்மை குறையாது.
எமர்ஜென்சி கருத்தடை மாத்திரைகள் – Emergency Contraceptive Pills
¬ பாதுகாப்பில்லாமல் உறவு கொண்டாலோ அல்லது ஆணுறை உபயோகப்படுத்தியும் அது கிழிந்து இருந்தாலோ எமர்ஜென்சி கருத்தடையான "மறுநாள் காலையில் பயன்படுத்தும் மாத்திரைகளை" எடுத்துக் கொள்ளலாம். இந்த ஹார்மோனல் மாத்திரையை உறவு கொண்ட 72
மணிநேரத்துக்குள் ஒரு மாத்திரையும், அதன் பிறகு அடுத்த 12 மணி நேரத்துக்குள் மற்றொரு மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பற்றி மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
எந்த வகை கருத்தடையும் உபயோகிக்காமல், பாதுகாப்பான நாட்களை மட்டும் உபயோகித்தால் கர்ப்பம் ஆவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இந்த முறையை முழுமையாக நம்ப முடியாது.
==--==