கேள்வி: எனது வயது 36, திருமனமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சமீபகாலமாக எனது பிறப்பு
உறுப்பில் இருந்து வெண்மையான திரவம் வருகிறது, அரிப்பு, எரிச்சல், நாற்றம் உள்ளது.
இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு சிகிச்சை உண்டா?
Am 36 years
old married female, have 2 children. Now a days I feel some white discharge
from my vagina with itching, burning sensation, and foul smell, How it happen?
Is there is any treatment for this white discharge?
மருத்துவர் பதில்: ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பில் vagina இருந்து நீர் போன்ற திரவம் வெளிப்படுதல் என்பது
ஒரு இயற்கை நிகழ்வு ஆகும். பிறப்பு உறுப்பில் உள்ள சுரப்பிகள் (Glands) இந்த திரவத்தை
சுரந்து பிறப்பு உறுப்பில் ஈரத்தன்மையை பாதுகாக்கும். இந்த ஈரத்தன்மை பெண்ணின் உறுப்பு
சுகாதாரமாக இருப்பதற்கு மிக அவசியமாகும்.
மாதவிடாய்
நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிகளின் செயல்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு
உலர்ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்களுக்கு பாலியல் உணர்வில் நாட்டம்
குறையும்..
இவ்வாறு
சாதாரணமாக வெளிப்படும் திரவத்தால், சில பெண்கள் மனரீதியாக உளைச்சல் அடையலாம். தங்களுக்கு
ஏதோ நோய் இருக்கிறது. அதனால்தான் இந்த நிலை என்று அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல்
மனதிற்குள்ளே வருந்தலாம்.
பிறப்பு
உறுப்பி்ல் இருந்து வெளிவருகின்ற திரவங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து
வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் சில நோய்களால் கூட இவ்வாறு திரவங்கள்
வெளிவரலாம்.
நோய்களினால் வரும் திரவத்திற்கும்,
சாதாரணமாக வரும் திரவத்திற்கும் என்ன வித்தியாசம்?
சாதாரணமாக வரும் திரவம் – Normal
vaginal dischrge
¬ சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (Clear) எந்த விதமான கெட்ட
மனமும் இல்லாததாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.
¬ மேலும் இது மாதவிடாயின் போதும், உடலுறவின் போதும், கர்ப்பம் தரித்திருக்கும்
போதும் அதிகரிக்கலாம்.
நோயினால் வரும் வெள்ளைப்படுதல் –
vaginal discharge due to infection or disease,
¬ நோயினால் வரும் திரவமானது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்,
கெட்ட நாற்றமுடையதாக இருக்கும், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி போன்ற திரவமாக இருக்கும்.
¬ இது குறிப்பிட்ட சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இது பொதுவாக
கிருமிகளின் தொற்றுகளால் ஏற்படும்.
¬ மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத நாற்றமுடையதாக , அல்லது
இடையிடையே ரத்தம் கலந்து வந்தாலோ இது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
மேற்கண்ட
அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுத்து மருந்துகளை சில நாட்களுக்கு
உட்கொண்டாலே போதும் இந்தப் பிரச்சினை சரியாகி விடும்.
ஆக பெண்ணுறுப்பிலே
இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்று பயந்தால், முதலில் அதன் தன்மையை கவனியுங்கள்.
கீழ் கண்ட
தண்மையுடன் உங்கள் பிறப்பு உறுப்பில் திரவம் வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
1. தயிர் போன்று வெள்ளை கட்டிகள் வெளிவருதல்-
Curd like white clots,
2. பச்சை அல்லது மஞ்சள் நிறத் திரவம் வெளிவருதல்
– greenish or yellowish discharge from vagina,
3. சகிக்க முடியாத நாற்றம் கொண்ட திரவம் வெளிவருதல்
– vaginal dischrge with foul smell,
4. அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் இல்லாத நேரத்திலும்
ரத்தம் போகுதல் – over bleeding, intermittent bleeding
உங்களுக்கு
நாற்றம், எரிச்சல், அரிப்பு மூன்றும் சேர்ந்து வெள்ளைப்படுவதால் உடனடியாக மருத்துவரை
சந்தித்து ஆலோசனை பெறவும். you have the vaginal discharge with burning
sensation, itching and foul smell, so
You need to consult the doctor without delay.
Leuchorrohea ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற White discharge, Yeast infection பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர்
நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – vellai paduthal வெள்ளைப்படுதல் – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==