Friday, October 24, 2014

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன ? What Women expect from Men?






 பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன ? “பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:  1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.  2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?  3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.  4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.  5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.  6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.  7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.  8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது  9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.  10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்.  11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்  12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.  13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.  14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.  15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.  17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.  18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.  19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.  20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.  21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.  22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.  23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.  24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.  25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.   பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.




பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன ?
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.

அதெல்லாம் ஒன்றுமில்லை

பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ 

வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’  

இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்.

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோடெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷோகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவியை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.


பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.








==--==

Please Contact for Appointment