பெண்களின் மனதிற்குள் என்ன
இருக்கிறது – What is inside the female Mind?
தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கும்…
¬ `கீ’ கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே… என்று கட்டுப்படுத்தவும் கூடாது.
¬ தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.
¬ காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?’ என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.
¬ விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே…’ என்று வற்புறுத்தக்கூடாது.
¬ எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண் களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசர மாக அதைச் செய்வதில் அவர் களுக்கு உடன்பாடு இல்லை.
¬ திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரண மாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக் குமே உண்டு.
¬ எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந் தள்ளக் கூடாது.
¬ ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.
¬ படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.
¬ அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ… பில் அதிகமாகி விடும்’ என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.
¬ வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்ட மாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளி சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.
¬ கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
¬ இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.
இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.
==--==