முழங்கை வலி சிகிச்சை – Tennis Elbow Treatment
முழங்கையின் வெளிப்புறத்தின் அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கி லத்தில்
Tennis elbow - டென்னிஸ் எல்போ என்பார்கள். இதற்கான பெயர் காரணம் இந்த வலி டென்னிஸ் விளையாடுபவர்களை அதிகம் தாக்கும், அதனால் இதற்கு டென்னிஸ் எல்போ என்று பெயர். ஆனால் டென்னிஸ் விளையாடுவது மட்டும் இந் நோய் வருவதற்குக் காரணமல்ல.
முழங்கையின் வெளிப்புறத்தில் கடுமையாக வலி இருக்கும். ஆரம்பத்தில் தாங்கக் கூடியதாக இருக்கும், இந்தவலி நாட்பட ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை கடுமையாக மாறும். நோய் அதிகமான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியை அதிகப்படுத்தும்.
வெயிட் தூக்கும்போதும், கதவின் கைபிடியைப் பிடித்து இழுக்கும் போதும், கைகளால் எதையாவது தாங்கி பிடிக்கும் போதும் வலி ஏற்படுவ துண்டு.
கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, தடிப்போ அல்லது விறைப்புத் தன்மையோ இருக்காது..
முழங்கையின் வெளிப்புறம் முட்டாக தெரியும் எலும்பில் இருக்கும் தசைநாரில் Tendon உள்காயம் ஏற்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த தசைநார்தான் கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகி யவை சரியான முறையில் இயங்குவதற்கு காரணம்.
வலியை அலட்சியப்படுத்தி வேலைகளை தொடர்ந்து செய்தால் தசைநார் மேலும் சேதமாகும்.
சிலருக்கு இந்நோயனது எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே சரியாகிவிடும்.
டென்னிஸ் எல்போவிற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டை Elbow Brace ஆகியவை ஆரம்ப நிலையில் பலனளிக்கும். நாட்பட இவை வலியை போக்க உதவாது.
நவீன மருத்துவத்தில் ஊசி மருந்து
பிஸியோதெராபி பயிற்சிகளைச் செய்தும், வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் எலும்பு சிறப்பு மருத்துவர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை போடக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் தற்காலிகமாக வீக்கத்தை போக்கி வலியை குறைக்கலாம்.
ஊசி போட்டு வலி குறைந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள். தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கை பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
சிலருக்கு ஊசிமருந்தின் வீரியம் தணிந்தபின் மீண்டும் இந்த வலி வரலாம்
டென்னிஸ் எல்போ ஓமியோபதி மருத்துவ சிகிச்சை. Tennis Elbow Homeopathy treatment,
நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் டென்னிஸ் எல்போவிற்கு நல்ல பலனளிக்கும்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Tennis Elbow, டென்னிஸ் எல்போ – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==