இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்….
கேள்வி: ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் எனக்கு பெண்ணுருப்பில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?
I have
bleeding per vagina after each and every
sexual intercourse. Is This serious?
மருத்துவர் பதில்: பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது பாதுகாப்பானது. பாப் ஸ்மியர் டெஸ்ட் செய்துகொள்வது மிக அவசியம்
Some people may experience this kind of vaginal bleeding
after sexual contacts. Its good to consult the doctor in-person to rule out your
doubts. Its good to take Pap smear test
கேள்வி: தாம்பத்திய உறவின் போது எனக்கு பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?
I feel dryness
in vagina during sexual intercourse, because of this I wont feel the sexual
pleasure, So am not able to complete the sexual activities, What can I do for
this?
மருத்துவர் பதில்: உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில பெண்களுக்கு உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின் உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி எது என்று அவர் களுக்குத் தெரியும். அதைத் தன் கணவரிடம் தெரியப்படுத்தி, அதைத் தூண்டச் செய்ய வேண்டும். அப்படியும் கசிவு ஏற்படவில்லை என்றால் கே.ஒய்.ஜெல்லி (K.Y Jellly) போன்ற செயற்கை வழுவழுப்புத் திரவங்களை உபயோகிக்கலாம். அப்படியும் திருப்தி இல்லையென்றால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
Some women need more time for foreplay to get lubrication in
vagina. Ask your partner to take more time for foreplay. You need to say your
partner to play more with your arousal parts. Even after this if you find
difficult, then you can use KY Jelly for lubrication. Its good to consult the
doctor in person to rule out your doubts.
கேள்வி: குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட வருடக் கணக்கில் கருத்தடை மாத்திரைகளை உட் கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
Is there is
any problem to get conceive, if am taking contraceptive pills for long time?
மருத்துவர் பதில்: பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியதும் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்., இருந்தபோதும் நீண்ட நாட்களுக்கு
கருத்தடை மாத்திரை உபயோகிப்பது நல்லதல்ல.மாத்திரைகளுக்கு பதில் காண்டம் உபயோகிக்கலாம்.
Not like that, even though its not advisable to take
contraceptive pills for lont time. You need to take contraceptive pills
according to the doctor advice only. Use condoms instead of using pills.
கேள்வி: மன உளைச்சலுக்கும், மாதவிலக்கு தள்ளிப் போவதற்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா?
Is there is
any relationship between depression and irregular menses?
மருத்துவர் பதில்: நிச்சயமாக உண்டு. மன உளைச்சல் காரணமாக ஹார்மோன் மாறுதல்கள் ஏற்பட்டு, மாத விலக்கு இரண்டொரு நாட்களுக்கோ அல்லது அதற்கு மேலுமோ தள்ளிப் போகலாம்.
Of course, its related with each other. Hormonal imbalance may
happen due to depression, because of this irregular of menses may happen.
கேள்வி: நான் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்கிறேன். இதனால் மார்பகங்கள் பெருத்துப் போகுமா?
Am using
contraceptive pills, Whether contraceptive pills increase my breast size?. Is
this true?
மருத்துவர் பதில்: கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உடலிலுள்ள தண்ணீரின் சேமிப்பு காரணமாக மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும் ஏற்படலாம். ஆனால் மார்பக அளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்களுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடு வதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்பகங்கள் பெருத்து விட்ட மாதிரித் தோன்றும்
Some women may experience obesity – weight gain due to using
contraceptive pills. Because of this your breast size may increased. But not
actually.
கேள்வி: பிறப்புறுப்பு நாற்றம் ஏன் ஏற்படுகிறது? அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?
Am having some
bad odour in vagina, what can I do for that?
மருத்துவர் பதில்: மிக மோசமான வாடை என்றால் அது தொற்றுக் கிருமிகளின் தாக்குதலால் இருக்கும். உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதவிலக்கிற்கு முன்போ அல்லது மாதவிலக்கின் போதோ அப்படி நாற்றம் வீசுவது இயற்கையே. உடலில் ஏற்படுகிற வேதி மாற்றங்களின் விளைவே அது. தொடர்ந்து நாற்றம் இருந்தால் பிறப்புறுப்பை அடிக்கடி சுத்தமாக கழுவி, உலர்வாக வைத்திருக்க வேண்டும்.
If the odour is so severe means you need to undergo some tests.
If you have this bad odour in vagina before and after menses means its quite
normal.
You need to maintain personal hygine well.
Its good to consult a doctor in person to rule out your doubts,.
கேள்வி: திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கலாம்?
How many years
shall I wait to get pregnant after marriage?
மருத்துவர் பதில்: ஒரு வருடம் வரை காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில் 80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்றனர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது.
You can wait for one with unprotected sex. Even after a year if you not get
pregnant by having unprotected sex, you need to consult a expert without any
hesitation.
கேள்வி: பிறப்புறுப்பில் அடிக்கடி ஏற்படும் அரிப்பிற்கு என்ன காரணம்?
What is the
reason to get itching in female private part (vagina)?
மருத்துவர் பதில்: பூஞ்சைத் தொற்றே இப்பிரச்சினைக்கான முதல் முக்கிய காரணம். உள்ளாடையினால் ஏற்படும் அலர்ஜி, பிறப்புறுப்பில் ஏடா கூடமாக வளரும் ரோமங்கள், ஈஸ்ட் தொற்று போன்றவையும் இதற்கான பிற காரணங்கள். தொடர்ந்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பின் விளைவாக பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் இப்படி அரிப்பு ஏற்படலாம். மருத்துவரை நேரில்
சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.
The main reason to get itching in vaginal region is due to
fungal infection. Some time inner wears and un trimmed hairs, regular usage of
anti biotics also the reasons. Its good to consult the doctor to rule out your
doubt.
கேள்வி: பிறப்புறுப்பைச் சுற்றி வலியில்லாத சிறு கட்டிகள் மரு மாதிரி தெரிகிறது? அவற்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாமா?
I have some painless mass around the vagina,
shall I go for surgery to remove that wart?
மருத்துவர் பதில்: சில பெண்களுக்கு இப்படிக் காணப்படுவது சகஜமே. சில நேரங்களில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் எனப்படும் மரு கூட இப்படி வரும். எனவே மருத்துவரிடம் ஒருமுறை நேரில் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வது நலம்.
Some womens have this type of mass. Some time it may me due to
Human Papilloma Virus Wart infection. So its good to consult a doctor inperson
to rule out your doubts.
கேள்வி: ஆணுறை உபயோகிக்கும் போது கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் உண்டு என்பது நிஜமா?
Its possible to get pregnant even during using
condoms?
மருத்துவர் பதில்: சரியாகவும், தரமானதாகவும் உபயோகிக்கப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் இது பாதுகாப்பானதே. சில பெண்கள் ஆணுறை உபயோகித்த போதும் கர்ப்பமடைகிறார்கள்.
If you using quality condom in right way, then its safety about 97%.
Few of getting pregnant Even using condoms.
==--==