உடலுறவின் போது ஏற்படும் தலைவலி – Head Ache During Intercourse and its Treatment.
கேள்வி: 26 வயது திருமணமான பெண் நான், நான் ஒவ்வொருமுறை உடலுறவு வைக்கும்போதும் தலைவலி வருகிறது. அதற்கு என்ன காரணம்? இதற்கு சிகிச்சை உண்டா?
மருத்துவர் பதில்: சிலருக்கு உடலுறவின் போது தலைவலி ஏற்படலாம். இந்த பிரச்சனை ஆண்களுக்கும் வரும். இது Coital Cephalgia எனப்படுகிறது. இதற்குரிய சரியான காரணம் தெரியாவிட்டாலும், உடலுறவின் போது அதிக இரத்தம் உடலுறவுக்குத் தேவையான உடலின் பாகங்களுக்குச் செல்வதால் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதால் இவ்வாறு தலைவலி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
சிலருக்கு இது ஆரம்ப காலத்தில் மட்டும் இருந்து பின்பு மறைந்து விடலாம். சிலருக்கு இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக இருக்கலாம்.
ஆரம்பத்தில் இவ்வாறு தலைவலி வரும் போது நீங்கள் வலி நிவாரணிகளை சாப்பிட்டு பார்க்கலாம். ஆனால் இது தொடர்ந்து ஒரு பிரச்சினையாக இருக்குமானால் ஒரு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் வெறுமனே இது உடலுறவின் பொது மட்டும் ஏற்படும் தலைவலியாக இல்லாமல்,வேறு காரணத்தால் ஏற்படுகிற தலைவலியாக கூட இருக்கலாம்.
மேலும் தலைவலியோடு வாந்தி வருதல், வலிப்பு வருதால் அல்லது உடலுறவு தவிர்ந்த மற்றைய நேரங்களிலும் தலைவலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும்.
ஆண்
பெண் இருவருக்குமே இதுபோல உடலுறவின்போது தலைவலி இருந்தால் நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
For appointment please Call us or Mail
Us
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 –
99******00 – தலைவலி – 20-12-2013
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==