வைட்டமின் ஏ குறைபாடு, அறிகுறிகள்,
சிகிச்சைகள் - தகவல்
வைட்டமின்-ஏ குறைவுபடுவதால் ஏற்படும் குருட்டுத்தன்மை
வைட்டமின்-ஏ நல்ல கண்பார்வைக்கு மிகவும் அவசியம். சிறுபிள்ளைகளில் வைட்டமின்-ஏ பற்றாக்குறை பார்வை இழப்பினை ஏற்படுத்துகிறது. மோசமான வைட்டமின் பற்றாக்குறை இருப்பின், நிரந்தர பார்வை இழப்பை (குருட்டுத்தன்மை) ஏற்படுத்தும். நம்முடைய தேசத்தில் ஆண்டுதோறும் 30,000 குழந்தைகள் வைட்டமின்-ஏ குறைபாட்டினால் பார்வை இழக்கின்றனர். 1
முதல் 5 வயது நிரம்பிய குழந்தைகளில் வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள் அதிகமாக காணப்படுகிறது.
வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள்
குழந்தைகளில் வைட்டமின்-ஏ குறைபாடு உடனடியாக ஏற்படுவதில்லை. வைட்டமின்-ஏ குறைபாட்டினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், வைட்டமின்-ஏ அதிகமாக உள்ள சத்தான உணவுகளை கொடுப்பதின் மூலம் சரிசெய்யலாம்.
மிக மோசமான வைட்டமின்-ஏ பற்றாக்குறை அறிகுறிகள்
¬ மாலைக்கண் நோய் (இரவு நேரங்களில் பார்வை இன்மை) என்பது முதல் அறிகுறியாகும். மாலை கண்நோய் உள்ள குழந்தைகளால் குறைவான வெளிச்சம் / இருட்டில் எதையும் பார்க்க இயலாது. கண்ணின் வெள்ளைப்பகுதி காய்ந்து, பொலிவு இழநது காணப்படும். மேற்காணும் அறிகுறிகளை கண்டறியும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகவும். சரியாக சிகிச்சையளிக்காத நிலையில் இந்நிலை நிரந்தரபார்வை இழப்பினை (குருட்டுத்தன்மை) ஏற்படுத்தும்.
வைட்டமின்-ஏ பற்றாக்குறையை தடுத்து நிறுத்தல்
Ø வைட்டமின்-ஏ அதிகளவில் உள்ள உணவினை உட்கொள்ளவும். பால், முட்டை, மீன் எண்ணெய் போன்ற பொருட்கள் வைட்டமின்-ஏ வினை அதிகளவில் கொண்ட பொருட்கள். கீரைகள், காரட் போன்ற காய்கறிகள் மற்றும் பப்பாளி மற்றும் மாம்பழம் போன்ற பழங்கள் போன்றவை வைட்டமின்-ஏ அதிகமுள்ள பொருட்களாகும்.
Ø ஹைதராபாத்தில் அமைந்துள்ள “தேசிய ஊட்டச்சத்து மையத்தின்” ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், 1-5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஒரு தேக்கரண்டி (ஸ்பூன்) வைட்டமின் ஏ சிரப், ஆறுமாதங்களுக்கு ஒரு முறை கொடுப்பதன் மூலம் வைட்டமின்-ஏ பற்றாக்குறையினை ஓரளவிற்கு தடுக்கலாம்.
Ø குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை வைட்டமின்-ஏ சிரப் கொடுப்பதால், வைட்டமின்-ஏ குடலில் தங்கியிருந்து, போதுமான அளவு வைட்டமின்-ஏ கிடைக்கிறது. தற்போது, குழந்தைகளில் வைட்டமின்-ஏ பற்றாக்குறைவால் நிரந்தர கண்பார்வை இழப்பை தடுத்துப் பாதுகாக்க இம்முறை நம் தேசம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது.
Ø கர்ப்பமுற்ற பெண்கள் அவசியம் வைட்டமின்-ஏ நிறைந்த சத்துப்பொருட்களை உட்கொள்ள வேண்டும். அவ்வண்ணம் செய்வது கருவில் வளரும் குழந்தை, தாயினின்று வைட்டமின்-ஏ வினை பெற்றுக் கொள்ள உதவுகிறது.
==--==