Friday, March 15, 2013

ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் - தெரிந்துகொள்வோம்






ஆண்கள் எப்படி பூப்படைகிறார்கள் !

v  பெண்கள் மார்பக வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல
v  ஆண்கள் விதைகளின் வளர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்றுபெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும், அத்துடன் ஆணுறுப்பும் சற்றுபெரிதாகும்.

v  குழந்தைத்தனமான குரல் உடைந்து ஆண்களின் கரகரப்பான குரல் மாற்றத்தை பெறுவார்கள்.

v  தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் முடி வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். முகம், நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு முடி வளரத் தொடங்கும்.

v  ஆண்களுக்குரிய புஜம் , மற்றும் நெஞ்சு பகுதிகள் உறுதியாகும்.

v  பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறத் தொடங்கும்.

v  குறிப்பாக அதிகாலை வேளையில் தானாகவே விந்து வெளியேறும்,. இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

v  வளரிளம் பருவத்தில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப்பட வேண்டியது குடும்பத்தினரின் & சுகாதார ஆலோசகரின் கடமையாகும்.

v  பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் வேகமான வளர்ச்சியை அடைவார்கள்.




மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

ஆவாரம் பூ சில தகவல்கள்.






ஆவாரம் பூ  சில தகவல்கள்.
Ø  ஆவாரம் பூ பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
Ø  உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது.
Ø  பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க இவை நல்ல‌ மருந்து.
Ø  நரம்பு தளர்ச்சியை போக்க வல்லது.
Ø  ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.
Ø  வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
Ø  ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830

Vivekanantha Clinic Health Line 

அலர்ஜி - ஒவ்வாமை நோய் காரணங்கள் & சிகிச்சை










அலர்ஜி - ஒவ்வாமை
ü  தோல் முழுக்க கொப்புளங்கள்...
ü  அரிப்பு..
ü  தடிப்பு
ü  தும்மல்,
என ரொம்பவே பயமுறுத்திவிடும் பிரச்சினை அலர்ஜி. அதை கவனிக்காமல் விட்டால், ஒருசிலவகையான அலர்ஜிகள் சில சமயம் ஆபத்தான நிலைக்கு கூட வழிவகுக்கும்.

அலர்ஜி வகைகள்,
எண்டோஜீனஸ் அலர்ஜி (Endogenous Allergy):  நம் உடலுக்கு உள்ளேயே ஏற்படும் சில மாற்றங்களால் வரக்கூடிய அலர்ஜி. 

எக்ஸோஜீனஸ் அலர்ஜி (Exogenous Allergy): வெளியில் உள்ள தூசு, வேதிபொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை நம் உடல் ஒப்புக் கொள்ளாததால் ஏற்படும் அலர்ஜி..
Ø  சுவாசத்தின் வழியாக அலர்ஜி,
Ø  தொடும் பொருட்களால் அலர்ஜி,
Ø  உணவுப் பொருள்களால் அலர்ஜி,
Ø  ஒளியால் அலர்ஜி
என்று அலர்ஜியை பிரிக்கலாம்.


எண்டோஜீனஸ் அலர்ஜி.
பொதுவாக, வெளியிலிருந்து வரும் வேண்டாத பொருட்களை எதிர்ப்பதற்காக நமது இரத்தத்தில் சில தற்காப்புப் புரதங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்று மட்டும் சிலர் உடலில் அளவுக்கதிகமாக இருக்கும். நம் உடலில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் செல்களையே திடீரென அந்தப் புரதம் தாக்கத் தொடங்கிவிடும். இதனால் அந்த செல்கள் பாதிப்படைந்து தோல் உரிதல்(Skin Pealing), அரிப்பு (Itching), எரிச்சல்(Burning) போன்றவை ஏற்படும். பொதுவாக, இந்த அலர்ஜி ஏற்படுவதற்கு மரபு(Genitic) அல்லது ஜீன்களில்(Gene) உள்ள பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம்.

இந்த வகை அலர்ஜிகளை சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்த இயலாது. கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். ஆனால், சிலருக்கு தானாகவே படிப்படியாக குறைந்து விடுவதற்கான வாய்ப்பும் உள்ளது.


எக்ஸோஜீனஸ் அலர்ஜி 
பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் வாழும் சூழலுக்கேற்றவாறு உடல் தானாகவே பழகிவிடும். இதை ஒத்துக்கொள்ளும் தன்மை (Sensitisation) என்போம். ஆனால், சிலருக்கு சில விஷயங்களில் இந்த ஒத்துக்கொள்ளும் தன்மை இயல்பிலேயே குறைவாக இருக்கும். வெளி இடங்களில் தண்ணீர் குடித்தாலே சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. மற்ற விஷயங்களில் அவர் உடல் ஆரோக்கியமாகவே இருக்கும். சிலரின் உடலோ தண்ணீரை ஏற்றுக்கொள்ளும்கொள்ளும். ஆனால், காற்றில் லேசாக தூசு இருந்தால் கூட அதை ஏற்றுக்கொள்ளாது கொள்ளாது. இதைத்தான் நாம் அலர்ஜி என்கிறோம்.

அலர்ஜி காரணிகள்
v  காற்றில் உள்ள தூசு,
v  பூஞ்சைகள் வெளியிடும் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சை விதைகள், மகரந்தங்கள்,
v  வாகனப் புகையில் இருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் துகள்கள்,
v  பெயின்ட்,
v  வார்னிஷ் போன்றவற்றில் இருந்து வெளிப்படும் வாசனை
நாம் வாழும் சூழலை பொறுத்தவரையில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவது சுவாசத்தின் வழியாக ஏற்படும் அலர்ஜியால்தான். இதனால்
Ø  தும்மல்,
Ø  வீஸிங் மூச்சு வாங்குதல்,
Ø  ஆஸ்துமா இளைப்பு நோய்,
Ø  சைனஸைட்டிஸ் மண்டையில் நீர் கோர்த்தல்,
Ø  மூச்சுப்பாதைநுரையீரல் போன்றவற்றில் அழற்சியும் ஏற்படலாம்.
நம் உடல் ஏற்றுக் கொள்ளாத அசுத்தச் சூழலில் இருந்து விலகியிருப்பதோ, தூசியை வடிகட்டும் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துவதோ மிக அவசியம்

சிகிச்சை
நவீன மருத்துவத்தில் அலர்ஜியால் ஏற்படும் இந்தப் பிரச்சினைகளுக்கு மருந்துகள் எடுத்தால் அறிகுறிகள் குறையுமே தவிர, அலர்ஜியை முற்றிலுமாக குணப்படுத்துவது சாத்தியம் இல்லை.
மேலும் நவீன மருந்துகள் மூலம் உடல் சோர்வு, போதையிலிருப்பது போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி மருத்துவ முறையில் அலர்ஜி, ஒவ்வாமை, அரிப்பு, தடிப்பு, தோல் சிவத்தல், மூக்கடைப்பு, தும்மல் சளி, சைனசைட்டிஸ் போன்ற தொந்தரவுகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் உண்டு. ஹோமியோபதி மருந்துகள் நோய் எதிர்ப்புதன்மையை அதிகரிக்கும். தகுதி வாய்ந்த ஹோமியோபதி சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெறும் போது நல்ல பலன் பெறுவது நிச்சயம்.


மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment