Friday, November 1, 2013

முடி – சில தகவல்கள் Hair Some Details








முடிசில தகவல்கள்


ü  நம்உடம்பில்ஐந்துமில்லியன்முடிகள்உள்ளன.


ü  தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன.


ü  புரோட்டின் சத்தில் உள்ள கரோட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்கு காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும்

ü  யூமெலானின் (Eumelanin) என்கிற பொருள்தான் நம் தலை முடி கறுப்பாக இருப்பதற்கு காரணம்.


ü  பொமேலானின் (Pheomelanin) என்கிற பொருள் அதிகமாக இருந்தால், தலைமுடி செம்பட்டையாக இருக்கும்.

ü  இந்தியர்களின் ரத்தத்தில் யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது.


ü  நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோஅவற்றுக்கான அடித்தண்டு (follicies),  தாயின் வயிற்றில் இருக்கிறபோதே தோன்றிவிடுகிறது.

ü  பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.


ü  ஒவ்வொரு அடித்தண்டிலும் இருபது முதல் முப்பது முறை முடி வளரும். ஒரு முறை முடி வளர்ந்தால், மூன்றிலிருந்து ஐந்து வருடம்வரை இருக்கும்.

ü  தலையில் வளரும் முடி ஒரு மாதத்துக்கு அரை இன்ச் என்கிற ரீதியில் வளரும். வெயில் காலத்தில் வேகமாக வளரும். தலை முடியின் வளர்ச்சி பதினைந்திலிருந்து முப்பது வயதுக்குள் அதிவேகமாக இருக்கும்.


ü  ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து நூறு முடி உதிர்ந்தால், அது நார்மலான விஷயம்தான். அதனால் ஒன்றும் கவலைப்பட வேண்டியதில்லை. இதேபோல தலைவாரிக்கொள்கிற நேரத்தில் 15 முதல் 20 முடிகள் உதிரலாம்.

ü  பெண்கள் குளிக்கும்போது முப்பது முடிவரை உதிரலாம். தலைவாரிக்கொள்ளும்போது  40 முதல் 60 முடிகள் உதிரலாம்.


ü  தலைமுடி உதிருவதில் மூன்று முக்கியமான நிலைகள் உண்டு.

ü  அனாஜென் (Anagen). இந்த நேரத்தில் முடியின் அடித்தண்டு நம் உடம்பில் நன்றாக காலூன்றி வளரும்.


ü  கேடாஜென்(Catagen): நன்கு வளர்ந்த முடி அதற்கு மேலும் வளராமலும், விழவும் முடியாத நிலையில் இருக்கும்.


ü  டெலோஜென் (Telogen): நன்கு வளர்ந்த முடி கீழே விழுந்த பருவம்தான் இந்த நிலை.







மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்






--==-=-==--

Please Contact for Appointment