Thursday, November 7, 2013

வெளிமூலம் இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. External piles treatment







கேள்வி: எனக்கு வெளிமூலம் இருக்குமோ, என்று சந்தேகமாக இருக்கிறது. இதை அறிய என்ன  வழி? I feel am suffering with Veli Moolam - External Piles, 

மருத்துவர் பதில்: வெளிமூலம் இருக்கும் பட்சத்தில் உட்காரவும், நிற்கவும் முடியாமல் சிரமப்படவேண்டியிருக்கும். மேலும் ஒரு பந்தின் மீது வலியுடன் உட்கார்ந்துள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் இருக்கும்.
வெளிமூலத்தின் ஆரம்ப நிலையில் ஆசனவாய் சுற்றி பரவி இருக்கும் சிரைநாளங்களில் போன்ற மிளகு வடிவத்தில் மூன்று சிறிய வீக்கமிருக்கும். இதனால் மலம் கழிக்கும் போது வலி இருக்கும். Veli moolam irunthal utkara kashtamaka irukum

இரண்டவது நிலையில் மிளகு வடிவில் இருந்த மூன்று வீக்கமும் வெளியே தெரியும்படி சற்று பெரிய வீக்கமாக காணப்படும் போது வலியும் வேதனையும் முன்பு இருந்ததை விட அதிகரிக்கும்.

மலம் கழிக்கும் போது வலி மேலும் கடுமையாகும். மலம் கழிக்கும் நேரத்தில் வலி எரிச்சல் வேதனையால் அவதிப்படுவார்கள். சிலருக்கு இரத்தப்போக்கும் இருக்கலாம். மேலும் மலங்கழிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தாலே பயப்படுவார்கள்.

வீக்கத்திலிருந்து ஒருவித நிறமற்ற திரவக்கசிவு ஏற்பட்டு ஆசனவாயில் நமைச்சல் ஏற்படும். இந்நிலையில் ஆசனவாய்ப் பகுதியில் வெடிப்பும், இறுக்கமும் ஏற்படும்.

மேற்கண்ட அனைத்து அறிகுறிகளும் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது வெளிமூலம் என நீங்கள் அறியலாம். அவ்வாறு இருந்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை பெறுவது அவசியம்.

Homeopathy medicines helps for Internal and external bleeding and non bleeding piles,

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்


==--==

Please Contact for Appointment