கேள்வி: தலை முடி கொட்டுவதில் வகைகள் உண்டா டாக்டர்? How many type of hair loss, what is the treatment for hair falling,
மருத்துவர் பதில்: தலைமுடி உதிர்வதில் இருபதுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அதில் மூன்று முக்கியமான வகைகள்.
1. ஆண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல். - Male pattern Hair loss - ஆன்ட்ரியோஜெனிக் அலோபீசியா
2. பெண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல். Female Pattern Hair falling,
3. அலோபீசியா ஏரியாட்டா. - Alopecia Areata
ஆண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல் வழுக்கை:
Ø ஆன்ட்ரியோஜெனிக் அலோபீசியா என்று இதற்குப்பெயர். முப்பதிலிருந்து ஐம்பது சதவிகிதஆண்களுக்கு முப்பது முதல் ஐம்பது வயதுவரை உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
Ø வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.
Ø மன உளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள்காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
Ø சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கை கால் வலிப்பு நோய்க்கான மருந்துகளை சாப்பிடும்போது, உயர்ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளை சாப்பிடும்போது, சிலவகையான நோய் எதிர்ப்புச்சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலை முடி கொட்ட ஆரம்பிக்கும்.
Ø சுட வைத்த தண்ணீரில் குளிப்பதாலும், தலையில் கண்டபடி டை அடிப்பதாலும் கூட முடிகள் உதிரலாம்.
பெண்களுக்கு ஏற்படும் முடிஉதிர்தல் வழுக்கை:
v பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம்.
v பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிற போதும் தலைமுடி உதிரலாம்.
v சில பெண்களுக்கு தைராய்டு சம்பந்தமான பிரச்னை உருவாகும் போதும் முடி உதிரலாம். இன்னும் சில பெண்களுக்கு‘ஓவரி’யைச் சுற்றி ஏற்படும் நோய்களாலும், அதனால் ஏற்படும் ஹார்மோன் அதிகமாகவோ, குறைவாகவோ சுரப்பதாலும் முடி உதிரலாம்.
v ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது முடிஉதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கவேண்டும்.
v கர்ப்பத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிற போதும் பெண்களுக்கு அதிக அளவில் முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படலாம். நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட சில உணவுவகைகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடுவதனால், சிலவகை சத்துகள் குறைந்து விடுகின்றன. இதனாலும் முடி உதிர்கிறது.
அலோபீசியா ஏரியாட்டா:
ü முடிஉதிர்தலில் மிக ஆச்சரியமான விஷயங்களை உள்ளடக்கியது அலோபேசியா ஏரியாட்டா என்கிற முடிஉதிர்தல் தான். இளம்பருவம் முதல் வயதானவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
ü தலையில் மட்டுமல்ல, உடம்பின் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். தலையில் உள்ள முடி அதிவேகத்தில் உதிர ஆரம்பிக்கும். சில நாட்களிலேயே தலைமுழுக்கவோ அல்லது ஒரிரு இடங்களிலோ சொட்டைஆகிவிடும்.
ü நம் உடம்பிற்கு தேவையில்லாத, கெடுதல் தரக்கூடிய பாக்டீரியாக்கள்
நம் உடம்பிற்குள் நுழைந்துவிட்டால், அதை அழித்து விடுவது நம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு திறன் சக்தி
(Immunity).
ü இத்தகய நோய் எதிர்ப்பு திறன் சக்தி (Immunity) குறைந்தால் நம் உடலில்
சில மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இத்தகைய மாறுபாட்டால்
சில இடங்களிலோ அல்லது உடல் முழுதுமாகவோ முடிகள் எல்லாம் உதிர்ந்து விடுகின்றன.
Symptomatic Constitutional Homeopathy treatment helps for Hair falling,
Symptomatic Constitutional Homeopathy treatment helps for Hair falling,
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==