கேள்வி: வழுக்கை ஏன் விழுகிறது?
மருத்துவர் பதில்: வழுக்கை விழ பல காரணங்கள் உண்டு, அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
ஆண்களுக்கு வழுக்கையை ஏற்படுத்தும் காரணிகள்
v தலையை சரிவர பராமரிக்காமல், உண்டாகும் அழுக்கு ,அதனால் ஏற்படும் பொடுகினாலும்
குடும்ப பொறுப்பு அல்லது பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன உளைச்சலாலும் தலைமுடி உதிரும்.
v மஞ்சள்காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் , வீரியமுள்ள சுரங்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
v புகைபிடிப்பதும், கைகால்வலிப்புநோய், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் உடல்
நோய் எதிர்ப்புக்காக அலோபதி மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதும் தலைமுடி உதிர்வை அதிகமாக்கும்.
v எப்போதும் வெந்நீரில் குளிப்பதும் தலைமுடி உதிர ஒரு காரணி ஆகும்
v தலைமுடியை கருப்பாக்க டை அடிப்பதாலும் கூட முடிகள் கொட்டும், தலை விரைவில் முடியை இழந்து , வழுக்கையாகும்.
v இயற்கையிலேயே சிலரது உடலில் முடிவளர தேவையான ஹார்மோன் மற்றும் புரதத்தின்
அளவு குறைவதாலும், தலைவழுக்கை உண்டாகும்.
v ஆண்களின் நிலை இவ்வாறென்றால், பெண்களுக்கோ, வெளியிலேயே நடமாட முடியாதபடி
வீட்டு தனிமைச்சிறையில் இருப்பதற்கு ஒப்பான வாழ்க்கை.
பெண்களுக்குவழுக்கைஏற்படுத்தும்காரணிகள்
Ø இயல்பாக பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் காலங்களான 12 வயது முதல் 15 வயதுவரை தலைமுடி அதிகம் இழக்க
நேரிடும்.
Ø பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும்அதிக இரத்தப்போக்கும், வெள்ளைபடுதலாலும் தலைமுடி உதிரும்.
Ø பெண்களின் பிரசவகாலங்களிலும் மற்றும் பெண்களின் 45 வயது அல்லது அவர்களின் மெனோபாஸ்
காலங்களிலும் அதிகமாக தலைமுடி உதிரும்.
Ø சிலருக்கு தைராய்டு கோளாறுகளாலும், கருப்பை சம்பந்தமான உடலியல்
பாதிப்பின்போதும், இவற்றினால் ஏற்படும் ஹார்மோன் அதீத சுரப்பு அல்லது குறைசுரப்பினாலும், தலைமுடி உதிரும்.
Ø கர்ப்பத்தடை மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போதும் தலைமுடி உதிரலாம்,
Ø ஃபாஸ்ட்ஃபுட் எனும் உடல்நலத்துக்கு சிறிதும் நன்மைபயக்காத , மாறாக உடலுக்கு கேடுவிளைவிக்கும், நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு
சிறிதும் பொருந்தாத சில உணவுவகைகளை திரும்பத்திரும்ப சாப்பிடுவதனால், உடலில் சில அரியவகைசத்துக்கள்
குறைந்து அதுவே தலைமுடி உதிர்வதற்கும் வழுக்கைக்கும் காரணமாகிவிடுகின்றது.
Ø இரத்தத்தில் ஹீமோகுளோபின் எனும் இரும்புச்சத்துகுறைவாலும் முடி உதிரும்.
Ø கடைகளில் விற்கும் தரமற்ற தேங்காய் எண்ணையில் மினரல் ஆயில் எனப்படும் , லிக்யூட்பேரப்ஃபின், தேங்காய் எண்ணை எசன்ஸுடன் கலக்கப்படுகிறது.
Ø எண்ணை எரிவாயு நிலையங்களில் , கச்சா எண்ணையை சுத்திகரித்து
பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தா, வாசலின் மெழுகு உள்ளிட்ட பெட்ரோலியப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன். இவற்றில் கடைசியில் கிடைப்பதுதான்
லிக்யூட்பேரஃபின் எனப்படும் மினரல் ஆயில். மிக அடர்த்தியான இந்த ஆயிலுக்கு மணமோ, நிறமோ கிடையாது. எந்த ஆயிலுடனும் சுலபமாக கலப்படம்
செய்யலாம்,
Ø பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து
விற்பனைக்கு வரும் இவ்வகை தரமற்ற தேங்காய்
எண்ணைகளை தலைக்கு தடவுவதால், தலையின் மேல் தோல் வறண்டுபோய்விடும், முடியும் வறண்டு முடிக்காலுடன்
உள்ள உயிர்த்தன்மையை இழந்துவிடும், மேலும், முடிவெள்ளையாகி , தலைஎங்கும்அரிப்புஎடுக்கும்.
வழுக்கை தலையில் முடிவளர
மருத்துவரை
ஆலோசித்து வழுக்கைக்கான சரியான காரணத்தை கண்டறிந்து பிறகு மேற்கொள்ளும் சிகிச்சையானது
நல்ல பலனை தரும். Cosmetic therapy will give only temporary result. Symptomatic Constitutional Homeopathy medicines helps for Hair loss,
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==