கேள்வி: ஆர்கஸம் என்றால் என்ன டாக்டர், இதை எப்படி உணரமுடியும்? இதை அடைவது எப்படி? கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
பதில்: ஆர்கஸம், இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைய பலருக்கும் சிரமம் இருக்கும். சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது.
செக்ஸ் உறவின்போது பெண்களுக்கு ஏற்படும் உச்ச நிலைக்குத்தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது இந்த சிரமங்களை கடந்தால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியும்.
ஆர்கஸம் எனப்படும் உச்ச நிலையை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருந்தால் ஆர்கஸத்தை முழுமையாக அடைய முடியும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு ஆர்கஸம் எளிதாக ஏற்படுவதாகவும் மேலும் உறவின்போது இன்பம் அனுபவிப்பது அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யும் பெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவது அதிகரிக்கிறதாம். இடுப்பு தொடர்பான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்கிய நான்கு வாரத்திற்குள் தங்களது செக்ஸ் வாழ்க்கையில் பல அதிசயிக்கதக்க மாற்றங்களை சந்தித்ததாக கூறுகின்றனர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்கஸத்தை அடைவதும் அவர்களுக்கு எளிதாகிறதாம்.
தாம்பத்ய உறவின்போது பெண்களுக்கு வசதியான பொசிஷனைத்தான் அவர்கள் பின்பற்ற வேண்டும், அதை விடுத்து துணைவர் கூறுகிறாரே என்பதற்காக தங்களுக்கு வசதியில்லாத பொசிஷனில் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. ஏனெனில் திருப்தி இல்லாத பொசிஷினில் உறவு கொள்ளும்போது அது பெண்களை மன ரீதியாக இறுக்கமாக்கி ஆர்கஸம் வராமல் தடுத்து விடும்.
உறவுக்கு முன்பாக செக்ஸியான நினைவுகளால் உங்களது மனதை நிரப்பிக் கொள்ளுங்கள் நிறைய கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நினைவுகள் உங்களுக்குள் ஆர்கஸத்தை வேகமாக வருவதற்கு உதவி செய்யும் கற்பனை என்பதே ஒரு தூண்டுவிக்கும் சாதனம் போன்றதுதான்.
உணர்வுகளைத் தூண்டவும் தாம்பத்ய ரீதியான உணர்வு வருவதற்காகவும் செக்ஸியான படங்களைப் பார்ப்பது வீடியோ பார்ப்பதுபோன்றவற்றை மேற்கொள்வதில் தவறில்லை அதேசமயம் உங்களது உணர்வை தயார் செய்ய இவைகள் ஒரு கருவிதான். அதில் உள்ளதைப் போல நடக்க மட்டும் முயற்சிக்க கூடாது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
உறவுக்கு முன்பு கணவரும் மனைவியும் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருப்பது அவசியம். உங்களது பேச்சில் செக்ஸ் வாசனை தூக்கலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இருவரும் மனரீதியாக உணர்வு ரீதியாக அதி வேகமாக தூண்டப்படுமாறு உங்களது பேச்சுக்கள் இருக்க வேண்டும் சின்னச் சின்ன விளையாட்டுக்கள் முத்தங்கள் உரசல்கள் உங்களுக்குள் உணர்வுத் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும் அதன் பிறகு உறவில் இறங்கும்போது நிச்சயம் அது பிரகாசமான விளக்காக சுடர் விட்டு எரியும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியும் உங்களால் ஆர்கசத்தை உணரமுடியவில்லை, எட்டமுடியவில்லை என்றால் தயங்காது மருத்துவ ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறவும்.
வாழ்த்துகள்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
==--==