Friday, November 1, 2013

முடி உதிர்வதால் என்ன பிரச்சனை? Reason for Hair falling,











கேள்வி: முடி உதிர்வதால் என்ன பிரச்சனை? ஏன் கூந்தலுக்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? இதற்கு ஏன் இவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய வேண்டும். Why we need to give important for hair loss, What is the reason for hair falling,


மருத்துவர் பதில்:  தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகளானது, எவ்வாறு உடல் நலத்தின் நிலையை நமக்குக் காட்டுகின்றன என்பதை பார்க்கலாமா.

உடலில் உள்ள பிரச்சினையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
உடலுக்கு தனக்குள் நடப்பவற்றைச் சொல்லத் தெரியாது. ஆனால் உடல் வெளிப்படுத்தும் சிற்சில அறிகுறிகள், மாற்றங்கள், ஆகியவை நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு உணர்த்தும்.

ஆரோக்கியமற்ற தலை முடியானது நமது உடல் நலம் கெட்டுப்போவதை உணர்த்துகின்ற அறிகுறியாகும்.

தலைமுடி சார்ந்த பிரச்சினைகளான பொடுகு, முடி உதிர்தல், இளநரை ஆகியவை எப்போதுமே சாதாரணமான, முக்கியத்துவமில்லாத பிரச்சினைகளாகவே பார்க்கப்படுகின்றன. தலை முடியில் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்காட்டும் வெளிக்காட்டிகளாகும்.

இளநரை: Pre mature Greyness தலைமுடி நரைத்தல் என்பது எப்போதுமே முதுமையைக் குறிப்பிடுவதில்லை. சிலருக்கு இளமையிலேயே கூட முடி நரைக்கக்கூடும். இளமை யிலேயே தலைமுடி நரைத்தல் என்பது பரம்பரை சார்ந்த நோயாகவும் இருக்கலாம். இளநரையானது உடல்நலம் குன்றியுள்ளதை குறிப்பிடுவதில்லை.

எனினும், ரத்த சோகை (Anaemia), தைராய்டு பிரச்சினைகள்(Thyroid Problems), வைட்டமின் பி12 (Vitamin B12)  குறைபாடு, தோலில் வெண்புள்ளிகள்/வெண் குஷ்டம் (Leucoderman -  Vitiligo)ஆகியவையும் இள நரைக்குக் காரணமாக அமையலாம்.

பொடுகு: Dandruff - தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும்.

ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம்.

பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், அதிகமாக பொடுகு காணப்பட்டால் மீன் செதில் நோய் எனப்படும், தோலில் சிவந்த செதில்செதிலான தடிப்புகள் சோரியாசிசாக (Psoriasis) கூட இருக்கலாம்,

உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அதிகமாக உதிர்கின்ற முடிகள் வெளிக்காட்டும். தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன் (Protein), இரும்புச்சத்து(Iron), துத்தநாகச் சத்து(Zinc), வைட்டமின் `'(Vitamin A), ஒமேகா3 (Omega 3) கொழுப்பு அமிலங்கள்(Fatty Acids) ஆகியவை தேவைப்படுகின்றன.

உணவில் கஞ்சத்தனம் காட்டினால், சத்துக்கள் உணவின் வழியாக கிடைக்காமல் போய்விடும். ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலோ, உணவுமுறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும்தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.

பேன் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை எடுப்பது நல்லது. பொடுகு ட்ரீட்மெண்ட் போலவே இதற்கும் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கவனமாக தலையணை உறை முதற்கொண்டு மாற்றுவது அவசியம்.

நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல பராமரிப்பு தலை முடிக்கு மிகவும் அவசியம்.

மருதாணி முடிக்கும், இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது.


எவ்வளவு அழகான முகமாக இருந்தாலும் ஹேர் ஸ்டைல் நன்றாக இல்லாவிட்டால் எடுப்பாக இருக்காது. நல்ல மேக்கப்பையும் மோசமான ஹேர் ஸ்டைல் வீணாக்கிவிடும். எனவே தலை முடியை தனியாக கவனிப்பது மிக அவசியம்.






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்







--==-- 

Please Contact for Appointment