Friday, October 25, 2013

திருமணத்திற்கு முந்தைய உடலுறவால் ஆபத்தா?










கேள்வி:- திருமணத்திற்கு முந்தைய உடலுறவால் ஆபத்தா?

பதில்:-  சில ஆண் - பெண் திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம்.

அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள்.

வேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்.

விரைவில் திருமணம் நடைபெறவிருக்கும் ஒருவருக்கு, இதுபோன்ற ஒரு பயம் ஏற்பட்டு என்னை வந்து சந்தித்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் அந்த நபர் இருமுறை பாலுறவு கொண்டாராம். ஆனால், அப்போது ஒருவித நெருக்கடி இருந்ததன் காரணமாக அவரால் முழுமையாக உடலுறவு கொள்ள முடியவில்லையாம்.

மேலும் சமீபகாலமாக வாரம் ஒருமுறை சுயஇன்பம் அனுபவித்து வருவதாகவும், வெளியேறும் விந்துவின் அளவு ஒருமுறை அதிகமாகவும், வேறொரு முறை குறைவாகவும் வெளியேறுவதாகவும் கூறினார்.

அதற்கு நான், இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மனதளவில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிர்த்து, திருமணத்திற்குப் பின் உரிய முறையில் உறவு கொள்வதில் மனோநிலையை செலுத்துமாறு அறிவுரை கூறினேன்.

பொதுவாக பயத்துடனான நெருக்கடி இரு‌க்கும்பட்சத்தில், சரிவரை பாலுறவு வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம். முடிந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டு டென்ஷனுடனேயே இருப்பாரானால், அதுவே திருமண வாழ்விற்கு சிக்கலாகி விடக்கூடும்.

தேவையற்ற பயத்தைத் தவிர்த்து, வேறு ஏதாவது பிரச்சினை இருப்பதாக உணர்ந்தீர்களானால், உரிய மருத்துவ பரிசோதனையை எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த உதாரணத்தை நான் ஏன் இங்கு குறிப்பிட்டுள்ளேன் என்றால், நம்மில் பலருக்கு இதுபோன்ற பய உணர்ச்சி இருக்கக்கூடும். அறிந்தும், அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்காக மனதளவில் அதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

திருமணம் முடிவான பிறகு புதிய வாழ்க்கையை எவ்விதம் உற்சாகமாக, உன்னதமாக - மகிழ்ச்சிப்பூர்வமாகத் தொடங்கி, கொண்டுசெல்லப் போகிறோம் என்பதில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.


நமது கலாச்சாரத்தை பேணிக்காக்கும் வகையில் திருமணத்திற்கு முந்தைய பாலுறவை தவிர்க்கலாம்








மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்









==--==

Please Contact for Appointment