Thursday, October 31, 2013

மிக அதிகமாக முடி கொட்டுகிறது. Excessive Hair falling











கேள்வி: எனக்கு மிக அதிகமாக முடி கொட்டுகிறது. இதனால் எனக்கு வழுக்கை விழுந்துவிடுமோ என பயமாக இருக்கிறது, என் தலை முடியை பாதுகாப்பது எப்படி? Am facing heavy hair falling, i worried about that am going to get baldness. How can i save my hair.


மருத்துவர் பதில்: நமக்கு இயற்கையாகவே தினமும் 50-100 முடிகள் உதிர்ந்து கொண்டேதான் இருக்கும். சிலசமயங்களில் 1,00கும் அதிகமாக முடி உதிரும் போதுதான் கவணிக்கப்பட வேண்டும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடுகள், தைராய்டு குறைபாடுகள், இரத்தசோகை, சொரியாசிஸ், பொடுகு போன்ற காரணங்களாலும் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதாலும்,  அடிக்கடி எண்ணெய், ஷாம்பு போன்றவற்றை மாற்றுவதாலும் முடி உதிரும்.

உப்பு அல்லது கடினமான தண்ணீரும், சில மாத்திரைகள் உட்கொள்வதாலும், மன அழுத்ததினாலும், பரம்பரையும் கூட காரணமாக அமையலாம்.

பால், கீரைவகைகள், பழங்கள், பேரீட்சை போன்றவற்றை அதிகமாக சாப்பிடுவது நல்லது. பொதுவாக அனைத்து ஊட்டசத்துள்ள உணவு வகைகளைசாப்பிடலாம்.

ஹேர் டிரையரை தவிருங்கள், கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிக்காதீர்கள்.

இவை அனைத்தும் செய்தும் முடி அதிகமாக உதிர்கிறது என்றால் மருத்துவரை ஆலோசித்து தீர்வுகாணுங்கள்.

மேலும் இதற்கு மூலக்காரணம் என்னவென்று ஆராய்ந்து அதற்கு மருத்துவம் மேற்க்கொண்டால் வழுக்கையில் இருந்து விடுபடலாம்.


எனவே தயக்கமின்றி மருத்துவரை ஆலோசித்து சரியான சிகிச்சை எடுத்தால் இளம் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.


Symptomatic constitutional homeopathy medicines helps for hair loss

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment