கேள்வி: எனக்கு முடி குட்டையாகவும் மெல்லியதாகவும் இருக்கிறது. அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர என்ன செய்ய வேண்டும்? I have very short and thin hair, What can i do to get long and thick hair.
மருத்துவர் பதில்: நமது முடி வேகமாக வளரும் ஆற்றலுடையது. ஒருவருக்கு ஒருநாளில் 0.5 மி.லி –யும், ஒரு மாதத்தில் 11/4 செ.மீ நீளமும் ஒவ்வொரு முடியும் வளரலாம்.
ஒரு தலைமுடி வளர்ந்து, அதன் ஆயுட்காலம் முடிந்து உதிர்வதற்கு 94 வாரங்களாகலாம், ஒரு முடி உதிர்ந்து பின் வளர்வது ஒரு சுழற்சியாக நடக்கிறது.
இதன் வளர்ச்சி காலங்களில் முறையான சத்துள்ள உணவுவகைகளையும், குறிப்பாக புரதம், இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
தரமான ஷாம்பு, எண்ணெய், மற்றும் சீயக்காய் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவும். உங்கள் தலை முடி வரண்ட முடியா அல்லது எண்ணெய்பசையுள்ள முடியா என்பதை பொருத்தே, எண்ணெய், ஷாம்பு போன்றவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் பொடுகு, புழுவெட்டு போன்ற பிரச்சணைகள் இருந்தாலும் முடி வளர்வது தடைப்படும். இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசித்து பின் எண்ணெய்களை உபயோகிப்பது பலன் அளிக்கும்.
மேலும் இதற்கு மூலக்காரணம் என்னவென்று ஆராய்ந்து அதற்கு மருத்துவம் மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
எனவே தயக்கமின்றி மருத்துவரை ஆலோசித்து சரியான சிகிச்சை எடுத்தால் இளம் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==