Friday, October 25, 2013

பாலுறவுப் புணர்ச்சி நன்றாக இருக்க அதிகம் அசைவம் சாப்பிட வேண்டுமா?






கேள்வி:- பாலுறவுப் புணர்ச்சி நன்றாக இருக்க அதிகம் அசைவம் சாப்பிட வேண்டுமா?


பதில்:- உடல் நலமும், பாலுறவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்றே கூறலாம்.

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நலத்தைப் பராமரித்தாலே பாலுறவுப் புணர்ச்சியும் ஆரோக்கியமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

புரோட்டீன் சத்துகள் அதிகம் உள்ள அசைவ உணவுகளை அதிகம் உண்பதால், அதிக அளவு பாலுறவுப் புணர்ச்சியில் நாட்டம் இருக்கும் என்று பரவலான ஒரு கருத்து நிலவுகிறது. அரிசி-கோதுமையில் செய்யப்படும் உணவு வகைகளை உண்பதால் போதிய புரோட்டீன் சத்து கிடைக்காது என்ற கருத்தில் உண்மையில்லை.

காய்கறிகள், பழங்கள், பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் அரிசி-கோதுமை உணவுகளையும் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் நீடித்து இருப்பதுடன், பாலுறவுப் புணர்ச்சியிலும் சிறப்பான பலன் கிடைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உடல் நலத்தை நல்ல முறையில் பராமரித்தாலே, பாலுறவில் ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். அன்றாட வாழ்வில் நம் உடல் நலத்திற்குத் தேவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதே பாலுறவுக்கும் போதுமானது. பாலுறவுப் புணர்ச்சிக்கென்று தனியாக உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

ஆரோக்கியமான பாலுறவை மேற்கொள்ள வேண்டுமானால், நமது உடலில் அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை அதிகரித்தல் அவசியம். இதற்கு அதிக அளவில் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடலாம். அதாவது 80 விழுக்காடு அளவு பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும்.

தேவைக்கு அதிகமாக அதிக அளவு உணவு சாப்பிடுவதால், அஜீரணக் கோளாறுகள் போன்ற உடல் நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

பாலுறவைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்யக்கூடியவற்றில் வைட்டமின்-பி மற்றும் ஈ முக்கியப் பங்காற்றுகின்றன.

வைட்டமின்-பி உடலுக்கு ஆற்றலை அளித்து இரத்த சிகப்பு அணுக்களை அதிகரிக்கிறது. உடலின் நரம்புகள் சிறப்பாகச் செயல்படவும் வைட்டமின்-பி அவசியமாகிறது.

கருமுட்டைகள் அதிகளவு உற்பத்தியாவதற்கும், உடலில் தாமிரச்சத்திற்கும் வித்திடுவது வைட்டமின் -ஈ.

பச்சைப்பட்டாணி, பருப்பு வகைகள், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பால் பொருட்கள், கீரை வகைகள், காளான்கள், முட்டை, பழங்கள் போன்றவற்றில் வைட்டமின்-பி அதிகம் உள்ளது.

எனவே உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதன் மூலம் பாலுறவு ஆரோக்கியத்தையும் பெற முயற்சிப்போம்.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment