Thursday, October 24, 2013

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவது எப்படி?









கேள்வி:- சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பதில்:-


  1. உடலின் அவ்வப்போதைய தேவைக்கு ஏற்ப அளவாக உணவு உட்கொள்வது.
  2. உடலின் தேவையை அதிகரிப்பது - உடற்பயிற்சி செய்வது.
  3. இன்சூலின் எடுத்துக் கொள்வது. இன்சூலின் மாத்திரையாக உட்கொள்ள முடியாது. ஏனெனில் அது ஒரு புரதம் எனவே நமது உடலில் அது செரித்து மாற்ற மடைந்து விடும். எனவே அதை ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும்.
  4. க்ளுக்கோஸ் போன்ற உணவுப் பொருட்கள் உணவிலிருந்து நமது இரத்தத்தில் கலக்காமல் மாத்திரைகள் மூலம் தடுப்பது. மேலும் நமது உடலின் அனைத்து தசைகளையும் இரத்தத்தில் உள்ள அதிகமான க்ளுக்கோஸை உபயோகிக்க வைப்பது.

    பலருக்கு முறையான, சரியான, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு இவைகளிலேயே இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். சிலருக்கு நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஊசியும் மாத்திரைகளும் தேவைப்படும்.

    நோயின் தன்மையைப் பொறுத்து தினமும் இன்சூலின் போடவேண்டுமா அல்லது தினசரி மாத்திரைகள் வேண்டுமா அல்லது இரண்டுமே சேர்த்து வேண்டுமா என மருத்துவர் தீர்மானிப்பார்.

    இந்தியாவில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகம். ஜனத்தொகையில் 7-9 சதவீதம் வரை சர்க்கரை வியாதி உள்ளவர்களே. எந்த வியாதியாக இருந்தாலும் மனம் தளராமல் அதற்குரிய வழிமுறைகளை கடைபிடித்து அந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.




மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்







==--==

Please Contact for Appointment