கேள்வி: தலை முடியை பராமரிப்பது எப்படி டாக்டர்? how to maintain healthy Hair
மருத்துவர் பதில்: தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது.
ஷாம்பூ (Shampoo) போட்டு அலசும் போது நமது முடி இழக்கும் ஈரப்பதத்தை மீண்டும் ஈடுகட்டவும், முடியின் pH அளவை சமச்சீராக வைத்திருக்கவும், முடி மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க கண்டிஷனர் (Conditioner) உதவுகிறது.
கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது நல்லது. மேலோட்டமாக மண்டையில் படாமல் 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் ஸ்ட்ராங்காக இருக்கும்.
அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது நல்லது.
இப்போது டெய்லி கேர் ஷாம்பூக்கள் (Daily Care Shampoo) பல மார்க்கெட்டில் கிடைக்கின்றன.
தினமும் கண்டிஷனர் உபயோகிப்பது நல்லதல்ல.
ஆண்ட்டி டாண்ட்ரப் (Anti Dandruff Shampoos)
ஷாம்பூக்களை தினமும் உபயோகப்படுத்துவது முடியை பாதிக்கும். வாரம் ஒரு முறை உபயோகப்படுத்தினால் போதுமானது.
தலைக்கு அடிக்கடி பெர்மிங் (Perming), ஸ்ட்ரெயிட்னிங், கலரிங் (Straightening) (Colouring) என்று ப்யூட்டி ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்வதும் முடியை பாதிக்கும்.
முடி பறக்காவண்ணம் செட் செய்வதற்கென்றே உள்ள ஸ்ப்ரே அல்லது க்ரீம் உபயோகிப்பவராக இருந்தால் அதனை முடி வேர்க்கால்களில் படாமல் உபயோகிக்க வேண்டும்.
பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==