உடலுறவின் நிலைகள் – Stages of Sexual Intercourse
உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTERCOURSE எனப்படும். ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் பொது அவர்கள் நான்கு நிலைகளினூடாக பயணித்து உச்ச நிலையை (Climax) அடைகிறார்கள.
அவை,
Excitement Phase
இந்த நிலையில்தான் ஒருவருக்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற்கேற்றவாறு அவரின் உடல் தயாராகிறது. ஆண்களில் ஆணுறுப்பு விறைப்படையத் தொடங்கும். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப்பிலே திரவம் சுரந்து ஈர நிலையை உருவாக்கும்.மேலும் பெண் மார்பகத்திலும் சற்று விறைப்புத் தன்மை ஏற்படும்.
Plateau Phase
இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மேலும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்புத் தன்மையை அடையும். பெண்களுக்கு திரவத்தன்மை அதிகம் சுரந்து வழுவழுப்பான நிலை ஏற்படும்.
Orgasm
இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்களை விட சற்று முன்பே உச்ச நிலையை அடைந்து விடுவார்கள்.
Resolution
இப்போது முந்திய நிலைக்கு திரும்புவார்கள். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் மீண்டும் முந்திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை (Orgasm) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் ஆண்கள் உச்சம் ஒருதடவை அடைந்தால் மீண்டும் அதை அடைவதற்கு சிறு இடைவெளி தேவை.
பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலும் மீண்டும் அவர் அந்த நிலையை அடைவதற்கு சில இடைவெளி தேவைப்படுவதாலும் சில வேளைகளில் பெண்கள் உச்ச நிலை அடையாமலேயே உடலுறவு முடிந்து போகிறது.
அதாவது உடலுறவின் போது ஆண்களுக்கு செமன் எனப்படும் விந்தனுக்களைக் கொண்ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மையை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற்று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபடும்.
ஆனால் பெண்கள் உச்ச நிலை அடைந்த பின்பும் அவர்கள் உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவதில்லை , தொடர்ந்து உடலுறவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண்டாம் நிலையிலே இருப்பார்கள்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==