Wednesday, September 4, 2013

ஓரினசேர்க்கை ஒரு பார்வை







ஓரினசேர்க்கை ஒரு பார்வை
ஆணும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான உறவு ஓரினச்சேர்க்கை அல்லது தற்பால்சேர்க்கை எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில் ஓரினச்சேர்க்கை குறிக்கப்படுவதுண்டு.

ஓரினசேர்க்கை என்பது ஒரு மனிதனின் இயல்பான உணர்வு என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை. பெண்ணை பார்த்து காதல் கொள்வது எப்படி இயல்போ அதேபோல் ஆணைப் பார்த்து காதல் கொள்வதும் இயல்பு. ஓரினசேர்க்கை இயற்கைக்கு மாறானது என்ற வாதத்தை வைப்பவர் பலர் உண்டு. உலகின் அனைத்துவகை மிருகங்கள், பறவை இனங்களிடம் ஓரினசேர்க்கை பழக்கம் உண்டு.

இனப்பெருக்க காலம் பரிணாம வளர்ச்சியில் இன்னும் பல விலங்குகளுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! ஆனால் பாலூட்டிகளில் நினைத்த மாத்திரத்தில் ஆண், பெண்ணுடன் சேர முடியாது, அங்கே பெண்ணின் தேவை பிரதானம், அவளது சம்மதத்தின் பேரில் மட்டுமே ஆண் அணுக முடியும், இவையெல்லாம் காட்டில் மட்டும் நடப்பதல்ல, ஒருகாலத்தில் காட்டில் விலங்காக இருந்த நாய்கள் தற்போது தெருவில் இனபெருக்கத்திற்காக போடும் சண்டையை பார்த்திருக்கலாம்!, பலசாலியான ஒரு ஆணால் மட்டுமே ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்க முடியும் என்பதே இயற்கையின் நியதி!

வருடத்தில் ஒரு முறை இனபெருக்க காலம் முடிந்து விட்டால் மீண்டும் அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டும்! ஆனால் இனபெருக்கம் என்பது உயிரியல் உந்துசக்தி, அவற்றால் சாமனியமாக அதை அடக்க இயலாது, ஒரு பலசாலி விலங்கு வெற்றி பெற்றால் அதற்கு அடுத்த பலசாலி விலங்கு ஒன்று அந்த கூட்டத்தில் நிச்சயம் இருக்கும், அவைகள் அதற்கு கீழ் உள்ள ஆண் விலங்குகளை தனது உடல் தேவைக்கு பயன்படுத்தி கொள்கின்றன! ஆனால் அது தொடருமா அல்லது அந்த வருடம் மட்டும் தானா என்பதே ஓரினசேர்க்கை சரியா தவறா என்பதற்கான கேள்வி!

சிங்ககூட்டங்களின் வாழ்க்கை சற்றே வித்தியாசமானது, பூனை குடும்பத்தில் பெரும்பாலும் அப்படி தான், இரண்டிற்கும் மேற்பட்ட பெண் சிங்கங்கள் இருக்கும் கூட்டத்தை ஒரு ஆண் சிங்கம் கட்டுபாட்டில் வைத்திருக்கும், பெண் சிங்கங்கள் வேட்டையாட ஆண் சிங்கம் முதலில் உண்டு மிச்சத்தை பெண் சிங்கங்கள் எடுத்து கொள்ளும், இனபெருக்க காலத்தில் நாடோடி சிங்கங்கள் துணையை தேடி வரும், அப்போது அதனுடம் சண்டையிட்டு அந்த ஆண் சிங்கம் வெற்றிபெற்று விட்டால் பழைய பெண் சிங்கங்கள் அதற்கே, அதன் பின் வரும் குட்டிகள் தாயின் பராமரிப்பில் இரண்டு வருடம் இருக்கும், இரண்டு வருடம் கழித்து ஆண் குட்டிகள் கூட்டத்திலிருந்து துரத்தியடிக்கபட்டு பெண் குட்டிகள் மட்டும் கூட்டத்தில் இருக்கும்! அவ்வாறு துரத்தியடிக்கபட்ட ஆண் குட்டிகள் நாடோடி சிங்கங்கள் என அழைக்கபடுகின்றன, அவைகள் குட்டியிலிருந்தே ஒன்றாக இருப்பதால் சில ஒன்றாகவே வேட்டையாடவும், பெண் வேட்டைக்கும் செல்கின்றன! அவ்வாறு செல்லும் பொழுது கூட்டத்தில் குட்டிகள் இருந்தால் கூட்டதலைவனுக்கு துணையாக பெண் சிங்கங்களும் களத்தில் குதிக்கும், ஏனென்றால் ஒருவேளை நாடோடி சிங்கங்கள் வெற்றிபெற்று விட்டால் முதலில் கூட்டத்தில் இருக்கும் ஆண் குட்டிகளை கொன்று விடும்!, இவ்வாறு இனபெருக்க காலத்தில் தோற்ற நாடோடி சிங்கங்கள் சிலசமயம் ஓரினசேர்க்கையில் ஈடுபடலாம்!

பென்குயின்கள் பெரும்பாலும் ஓரிணை கொள்கையை கடைபிடிக்கின்றன, இனபெருக்க காலத்தில் முட்டையை ஆண் அடைகாக்க, பெண் வேட்டைக்கு சென்று தேவையான புரதத்தை உடலுக்கு ஏற்றி கொண்டு கொஞ்சம் உணவையும் வாயில் கவ்வி வரும், பொறிந்திருக்கும் குஞ்சுகளுக்கு அது உணவாக அளிக்கப்படும், மீண்டும் குஞ்சுகள் சிலகாலம் பெண் பென்குவின்கள் பாதுகாப்பில் இருக்கும், அப்பொழுது ஆண்கள் வேட்டைக்கு சென்று திரும்பும்!, எல்லாம் சரி இங்கே ஓரினசேர்க்கைக்கு என்ன வேலை என்பது தானே கேள்வி, உணவு சேகரிக்க செல்லும் பென்குயின்கள் எத்தனை உயிரோடு திரும்பும் என்பது மிக முக்கியம் தானே!, ஜோடி இழுந்த ஒரு பென்குயின், அதே போல் ஜோடி இழந்த இன்னொரு பென்குயினுடன் இணைத்து கொள்கிறது, அவைகள் தாயின்றி இருக்கும் குட்டிகளை எடுத்து வளர்க்கும்!, அவைகளுக்குள் ஓரினசேர்க்கை இருக்குமா என்பது சரியாக தெரியவில்லை!

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்









==--==

Please Contact for Appointment