கேள்வி
எனக்கு திருமணம் ஆகிவிட்டது. குழந்தைகளும் உண்டு. இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஆணுறை அணிந்து உடலுறவு கொள்வதில் திருப்தியில்லை, என் மனைவிக்கோ கருத்தடை மாத்திரை உட்கொண்டால் உடல் குண்டாகிவிடும் என்று பயப்படுகிறாள்.. ஆண்களுக்கென பக்கவிளைவுகள் உண்டாக்காத கருத்தடை மாத்திரைகள் உண்டா? இதற்கு மாற்றுவழி என்ன?
பதில்
கருத்தடை மாத்திரை மூலம் உடல் குண்டாகும் என்பது உண்மைதான். சில ஆண்களுக்கு ஆணுறையால் திருப்தி இல்லை என்பதும் உண்மைதான்.
மாற்று வழியாக ஆண்கள் பின்பற்றக்கூடிய கருத்தடை முறைகள பற்றி கேட்டு இருந்தீர்கள். காண்டம் தவிர ஆண்கள் பின்பற்றக்கூடிய கருத்தடை முறைகளாவன, Withdrawal முறை எனப்படும் விந்து வெளியேறும் தருணத்தில் விந்தை பெண்ணுறுப்பில் செலுத்தாமல் ஆணுருப்பை வெளியே எடுத்து விடும் முறை. ஆனால் இந்த முறை நம்ப முடியாத்து. உணர்ச்சி
வேகத்தில் வெளியே எடுக்க தவறினால் கருத்தறிக்க வாய்ப்புகள் அதிகம்.
அடுத்ததாக ஆண்களுக்கு செய்யக் கூடிய கருத்தடை அறுவை சிகிச்சை.
இந்த முறை நிரந்தரமானது.
உங்களுக்கு இரு குழந்தைகள் உள்ள காரணத்தால் அறுவை சிகிச்சை முறை உகந்தது.
அறுவை சிகிச்சை முறைக்கு நீங்கள்
தயங்கினால், இப்போது நிறைய திருப்தி அளிக்கக் கூடிய பலவகையான காண்டம்கள் கிடைக்கின்றன அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
அல்லது உங்கள் மனைவி லூப் எனப்படும் காப்பர் டி யை பொருத்திக்கொள்ள முடியும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மாத்திரையால் ஏற்படும் பக்க விளைவுகளை விட குறைவானவை. உடற்பருமனும் அதிகரிப்பதில்லை.மேலும் இது உடல் உறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதும் இல்லை. ஒரு மருத்துவரை சந்தித்து உங்கள் மனைவிக்கு லூப் பொருத்துவதே சிறந்த முறை.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்
==--==