Friday, September 6, 2013

பிறப்புறுப்பிலிருந்து திரவக்கசிவு - Vaginal Discharge










                  
கேள்வி
மருத்துவருக்கு வணக்கம்.,
எனது நெருங்கிய தோழி வயது 50 அவருக்கு நீரிழிவும் வேறு பிரச்சினைகளும்  உண்டு. பத்துவருடங்களுக்கு முன் fibroids காரணமாக கர்பப்பை  அகற்றப்பட்டது.. தற்போது அவருக்கு பெண உறுப்பின் மடிப்பு பகுதிகளில் அழுக்கான திரவம் கசிகிறதாம். அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டுமென்று urinary  urgency இருக்கிறதாம். பெண்ணுறுப்பின் வெளி பகுதிகளில்  சில சமயம் அரிப்பு இருக்கிறதாம்,  மருத்துவர் ஆலோசனைப்படி ஆயிண்ட்மெண்ட் போட்டும் சரியாகவில்லைஇது ஒருவகை நோயா...சுத்தமின்மை காரணமா?  பெண் உறுப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு அறிவுரை சொல்லவும். ஆண் மருத்துவரிடம் சொல்லி சிகிச்சை பெற மிக தயக்கமாக இருக்கிறதாம்.  My friend is suffering from watery discharge from vagina and that makes her more discomfort, that causes itching and bad smell also. She also having urinary urging.  She have very shy to consult you in person, Shall i came for consultation with you?

பதில்
பிறப்புறுப்பு சம்பந்தமான பிரச்சினைகளை கண்டறிய அந்தத் திரவத்தின் தன்மையைப் பொறுத்து அது என்ன பிரச்சினை நோய் என்று ஓரளவுக்கு தீர்மானிக்கமுடியும்.

உதாரணத்திற்கு பிறப்புருப்பிலே  இருந்து வெளிவரும் திரவமானது வெள்ளை நிறமாகவும் தயிர் போன்ற தன்மை கொண்டதாகவும், துர்நாற்றம் அற்றதாகவும் இருந்தால் அது Candidiasis  எனப்படும் ஒரு பங்கஸ் - பூஞ்சை தொற்றினால் ஏற்பட்டிருக்கலாம்நீரழிவு நோயாளிகளுக்கு இந்தத் தோற்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

அடுத்ததாக திரவமானது light brown நிறமாகவும் துர் நாற்றம் வீசுவதாகவும் , அரிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தால் Bacterial Vaginosis எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றாக இருக்கலாம்.

இளமஞ்சள் நிற அல்லது பச்சை நிற திரவத்தோடு அரிப்பும் ஏற்படுமானால் Trichomoniasis எனப்படும் தொற்றாக இருக்கலாம்.

இவற்றிற்கு சரியான மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எளிதாக தீர்வு காணலாம்.


உங்கள் தோழிக்கு நீரழிவு நோய் இருந்தால் Candidiasis எனப்படும் பங்கஸினால் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதற்காக மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

இருந்தாலும் உங்கள் தோழியின்  வயதை கருத்தில் கொள்ளும் போது உடனடியாக ஒரு மகளிர் நோய் மருத்துவ நிபுணரை சந்திப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனென்றால் சில புற்று நோய்கள் கூட மிக அரிதாக இப்படியான அறிகுறிகளை வெளிக்காட்டலாம்.


ஆண் மருத்துவரிடம் சொல்ல வெட்கம் என்றால் பெண் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாமே!!!


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்










==--==

Please Contact for Appointment