Wednesday, September 4, 2013

உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னித்தன்மை உடையவரா?










உடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னித்தன்மை உடையவரா? - Is it true that bleeding during sexual intercourse only proves virginity?
ஒரு பெண் முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும்போது இரத்தப் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விஷயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் கூறுகிறது.

மக்களிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படிப்பட்ட பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

இந்த இரத்த கசிவு நடைபெறுகிறது?
பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறுநீர் துவாரம் ( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் யோனி துவாரம் (vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் ஹைமன்  (hymen)எனப்படும் ஒரு மென் சவ்வினால் சூழப்பட்டிருக்கும். அந்த மென் சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.
முதன் முதலில் உடலுறவில் ஈடுபடும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தக்கசிவு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

ஹைமன் கிழிபட காரணங்கள்
ü  சில பெண்களுக்கு இந்த ஹைமன்  இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்.

ü  சில பெண்களுக்கு இந்த ஹைமன்  உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் கிழிந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங், உடற்பயிற்சி போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த ஹைமன் பாதிக்கப்படலாம்.

ü  சுய இன்பத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் இந்த  ஹைமன்   கிழிந்து விடலாம்.

ü  சில பெண்களிலே இந்த ஹைமன் எலாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் ஹைமன் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமன்  மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை மருத்துவ ரீதியாக நிரூபித்து விட முடியாது.





விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168

9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்










==--==

Please Contact for Appointment