Friday, August 30, 2013

தூக்கமின்மை - Insomnia ஹோமியோபதி சிறப்பு சிகிச்சை









தூக்கமின்மை - Insomnia
தூக்கமின்மை நோய் ஆங்கிலத்தில் Insomnia எனப்படுகிறது.
இது வயதானவர்களினிடையே காணப்படும் ஒரு பொது பிரச்சினையாகும்.

நான்கு வெவ்வேறு விதமான முறைகளிலே இந்த நோய் வெளிப்படலாம்...
ü  படுத்தே இருந்தாலும் உறக்கமின்மை
ü  அடிக்கடி தூக்கம் களைதல்
ü  சரியான அளவு தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்துவிடல்
ü  தூங்கினாலும்  திருப்தியான தூக்கமின்மை

இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு இனைந்து வரலாம்.  உதாரணமாக மன நோய்கள் , உடல் நோய்கள் போன்றவை.
இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இருப்பவர்களுக்கு இந்த தூக்கமின்மை பிரச்சினை ஏற்படுமானால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்படும் தூக்கமின்மை என்று விட்டு விடாமல் , தூக்கமின்மைக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.

இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்...
Ø  வயது முதிந்தவர்கள்
Ø  துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள்
Ø  பெண்கள்
Ø  விவாகரத்துப் பெற்றவர்கள்
Ø  புகைப் பிடிப்பவர்கள்
Ø  அதிகம் மது அருந்துபவர்கள்
Ø  அதிகம் காபி, டீ, கோக் குடிப்பவர்கள்
Ø  சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள்

தீர்வு
முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினால் மன நோய் உட்பட ஏற்படுமானால் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளுதல் அவசியம்.
அடுத்ததாக இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக தூங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

சரியாக தூங்கும் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி

ü  ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழுவதற்குமான நேரத்தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள்
ü  ஒழுங்கான உடற்பயிற்சி (இரவில் உடற்பயிற்சியை தவிர்க்கவும்)
ü  பகல் நேரத்தில் பிரகாசமான சூரிய ஒளி வெளிச்சத்திலே இருக்கப் பழகுங்கள்.
ü  இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள்
ü  இரவில் எளிதில் ஜீரனமாகக்கூடிய உணவை உட்கொள்ளுங்கள்.
ü  தூங்கும் அறையை இருட்டாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள்
ü  புகை மற்றும் குடியை தவீர்த்து விடுங்கள்
ü  உறக்கத்திற்க்கு முன் மனதை சாந்தப் படுத்திக்கொள்ளுங்கள்.
ü  மேற்சொன்ன வழிமுறைகளுக்கு அடுத்ததாக உங்கள் நித்திரை பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தூங்கும் பழக்க பயிற்சி முறை...

v  படுக்கைக்கு சென்று சில நிமிடங்களில் தூங்கமுடியவில்லை என்றால் உடனேயே அறைவிட்டு வெளியேறி, நித்திரை என்னத்தை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது வாசித்தல் போன்றவை ஒன்றை செய்யுங்கள்.
v  இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள்.
v  அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள். படுக்கைக்கு சென்று சில நிமிடங்களிலே தூக்கம் வரும் வரை இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்.
v  முக்கியமாக பகல் நேரத்தில் தூங்குவதை தவிருங்கள்.

இப்படியும் உங்களால இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் மருத்துவரை ஆலோசித்து சரியான  மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line








==--==

Please Contact for Appointment