Saturday, August 31, 2013

முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?









கேள்வி: முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? - First baby cesarean then family planning, Now am trying to get pregnant - is it possible? 

மருத்துவர் பதில்: மறுபடியும் குழந்தை வேண்டுமானால் கருப்பையின் வடிவம், தன்மை மற்றும் முன்பு செய்த ஆபரேஷனின் விளைவுகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கருப்பை குழாய்களின் தன்மை மற்றும் நீளத்தையும் கண்டறிய வேண்டும். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் அட்ஹெஷன்ஸ் என்கிற நிலை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பப்பை, கருப்பை குழாய், சிறுகுடல், சிறுநீர்ப்பை ஆகியவை ஜவ்வு போன்ற இணைப்புகளால் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அப்படி இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். இருந்தால், அதற்குத் தகுந்த சிகிச்சைகளை கொடுக்கலாம். இவற்றை கண்டறிய பல முறைகள் உண்டு.

சோனோ சால்பிஞ்கோகிராம் என்கிற ஸ்கேன் முறையில் அறுவை சிகிச்சை இல்லாமல் கருப்பை மற்றும் நாளத்தின் தன்மையைக் கண்டறியலாம் அல்லது லாப்ரோஸ்கோபி என்கிற முறை உதவும். அல்லது ஹிஸ்டெரோ லாப்ரோஸ்கோபி முறையிலும் இதைக் கண்டறியலாம்.


குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது சினைமுட்டை வருவதைத் தடுக்க, சினைக் குழாயில் முடிச்சு போட்டுவிடுவார்கள். கர்ப்பப்பை, கருப்பை குழாய் ஆகியவை நல்ல முறையில் இருக்குமானால் ரீகேனலைசேஷன் மைக்ரோ சர்ஜரி மூலம் சினைக்குழாயில் வழி ஏற்படுத்தி, சரி செய்ய முடியும்.




தகவலுக்காக மட்டுமே
=================


விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line















==--==

Please Contact for Appointment