பிழிச்சில்
ஒரு
நாளைக்கு ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம்வரை உடலில் இளஞ்சூட்டில் எண்ணெய் விட்டு சிகிச்சை
அளிக்கும் முறை இது. எலும்பு முறிவுகள், மூட்டு பிசகு, கை-கால் வலி மற்றும் விரைப்புத்தன்மை, பக்கவாதம், ருமாடிக் காய்ச்சல், ருமாய்ட்டோடு ஆர்த்தரைட்டிஸ் போன்ற
பிரச்சினைகள் இந்த சிகிச்சையால் விலகும்.
தாரா
ஒரு
குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில்
விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது. உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை
மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம்
தெளிவாகிறது. கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல்...
போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.
அப்யங்க
ஸ்வேதனா
மிக
எளிமையான சிகிச்சை முறைதான் இது. குறிப்பிட்டகால ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு
மூலிகை மருந்து கலந்த எண்ணெய் மற்றும் நீராவி குளியலுடன் மசாஜ் சிகிச்சை
அளிப்பார்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உடலை வலுப்படுத்தும், உடல் திசுக்களை உறுதிப்படுத்தும், நல்ல - ஆழ்ந்த தூக்கத்தை
வரவழைக்கும்.
நவரக்கிழி
பல்வேறு
மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும்
முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க
வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின்
விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு
பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும்
குணமாகின்றன.
உத்வர்த்தனம்
இது
மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள்.
இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள்
அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும்
புத்துணர்வு பெறுகிறது.
நஸ்யம்
இது
ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும்
மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு
புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு
மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.
வருடம்
முழுவதும் உழைத்து உழைத்து மனதாலும், உடலாலும் தேய்ந்து போனவர்கள், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது
மிகவும் நல்லது. இது கொஞ்சம் அதிகச் செலவுடைய சிகிச்சைதான் என்றாலும், பல நன்மைகளைத் தரக்கூடியது என்பதால்
தாராளமாக எடுத்துக் கொள்ள முன்வரலாம்.
அதற்காகப்
போலி ஆயுர்வேத சிகிச்சை மையங்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது.
நம்பகமான
ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால் நல்ல பலன்
கிடைக்கும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==