மூட்டு வாதம் - Rheumatoid Arthritis
மூட்டுகளை தாக்கும் இந்த நோய் ரூமடாய்ட் ஆர்த்ரைட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது, இது பொதுவாக சிறிய மூட்டுகளையே தாக்கும்.
Ø அதிகமாக விரலில் உள்ள மூட்டுகளையே தாக்கும். அதைத் தொடர்ந்து மற்ற மூட்டுகளையும் தாக்கலாம்.
Ø கைவிரல் மூட்டு போன்ற சிறிய மூட்டுகளையே பொதுவாக பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
Ø மூட்டுகள் சமச்சீரான முறையில் பாதிக்கப்படும்.அதாவது உடலின் இருபக்கமும் உள்ள ஒரே வகையான மூட்டுகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும்
Ø ஒரே நேரத்தில் பல மூட்டுகளில் வலி ஏற்படும்
Ø வலி
Ø மூட்டு வீக்கம்
Ø காலையில் இறுகிய நிலை(Morning Stiffness)
Ø முழங்கைக்கு சற்றுக் கீழாக சிறிய கட்டிகள் காணப்படுதல் (Rheumatoid
Nodules)
இந்த பாதிப்புக்கள் பொதுவாக ஆறு வார காலத்திற்கு குறையாமல் இருந்தால் மூட்டுவாத நோயென கருதலாம். இந்த நோய் தீவிரமாக(Active) இருக்கும் போது மிதமான காய்ச்சல் ஏற்படலாம்.
இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் தொடர்ச்சியாக வலி இல்லாமல் விட்டு விட்டே பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நோயாளிகளுக்கு இரண்டு விதமான மருந்துகள் கொடுக்கப்படும்.
நோயினால் ஏற்படும் வலியினை கட்டுப்படுத்தும் மாத்திரைகள்-
வலி இருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்
நோய் தீவிரமடைவதைத் தடுக்கும் மாத்திரைகள்-
இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும் .
இந்த நோய் பூரணமாகக் குணப்படுத்தப் பட முடியாதது. ஆனால் இது மாத்திரைகள் மூலம் நன்கு கட்டுப்படுத்தலாம்.
இந்த நோய் உள்ளவர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு ஆரம்பத்தில் நோய் தீவிரமாக உள்ள நேரத்தில் மட்டும் மாத்திரைகளை உட்கொண்டு வலி மறைந்தவுடன் மாத்திரைகள் சாப்பிடுவதை விட்டு விடுதல். அவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டே போவதோடு இறுதியில் மூட்டுகள் நிரந்தரமாக பாதிக்கப்படும்.
சிகிச்சை
ஹோமியோபதி
மருத்துவத்தில் நோயின் தன்மையை கட்டுப்படுத்தக்கூடிய நோயின் அறிகுறிகளுக்கேற்ப
மருந்துகள் அளிக்கப்படும். தொடர்ந்து மருந்தினை உட்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
மேலும்
விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவரை தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==