வளைந்த ஆணுறுப்பு.
எல்லா ஆண்களுக்கும் ஆணுறுப்பு விறைப்படையும்போது போது நேராக இருப்பதில்லை. சில பேருக்கு நாற்பத்தைந்து டிகிரி வரைகூட வளைவு இருக்கலாம்.
அதிகமான வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்த நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன. இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும் என பயப்பட வேண்டியதில்லை.
ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்.
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadiasis)
இயற்கையாக சிறுநீர் மற்றும் விந்து வெளியேறும் துவாரமானது ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் இல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்து காணப்படலாம்..
இதற்கு ஆணுறுப்பின் நுனியில் துளையை உருவாக்கும் அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.
பைமோசிஸ் (Phimosis)
பொதுவாக ஆணுறுப்பு விறைப்படையும் போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும் . ஆனால் சிலருக்கு இந்த முன் தோல் பின்நோக்கி இழுபட முடியாமல் இருக்கும். இதனால் ஆணுறுப்பில் சில நேரங்களில் வளைவு ஏற்படலாம்.
இதற்கு சிறிய அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம். இந்த அறுவை சிகிச்சை Circumcision எனப்படும், இது முஸ்லிம் ஆண்கள் செய்து கொள்ளும் சுன்னத் எனப்படும் முறையாகும்.
சிறுநீர் வழிச் சுருக்கம். (Urethral Stricture)
சிறுநீர் வெளியேறும் குழாய் போன்ற அமைப்பு ஆணுறுப்பின் உள்ளே இருக்கிறது. அது urethra எனப்படும். இது சுருங்குவதால் Ureththral
Stricture) ஏற்படுகிறது. இதனால் கூட ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
பைய்ரோநியஸ் நோய் (Peyronie's disease )
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆணுறுப்பின் தோலுக்குக் உள்ளாக இருக்கும் பகுதி கடினமடைவதால் சற்று தடிப்புடன் காணப்படும். அந்த ஆணுறுப்பு விறைப்படையும் போது இவ்வாறு தடிப்படைந்த பகுதியை நோக்கி வளைந்து காணப்படும்.
ü சில வேளைகளில் அவர்களுக்கு வலி கூட ஏற்படலாம்.
ü சில ஆண்களிலே உடலுறவிலேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம்..
ü முக்கியமாக இதனால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மனதளவிலே பெரிய அழுத்தங்கள் ஏற்படலாம். அதுவே அவர்களின் இல்லறத்தைப் பாதிக்கலாம்.
ü இந்த நோயின் அறிகுறிகள்
ü இது படிப்படியாக ஏற்படலாம் அல்லது சிலருக்கு விரைவாகக் கூட ஏற்படலாம்.
ü முக்கிய அறிகுறி ஆணுறுப்பு விறைப்படையும் போது ஒருபக்கமாக வளைந்திருத்தல்.
ü நிறைய பேருக்கு இந்த வளைவு மேல் நோக்கியதாகவே இருக்கும். ஆனாலும் சிலருக்கு கீழ் நோக்கியதாக அல்லது பக்கவாட்டில் கூட இருக்கலாம்.
ü அடுத்த முக்கியமான அறிகுறி ஆணுறுப்பிலே வலி ஏற்படுதல்.
ü சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதையே இது தடுக்கலாம்.
ü சிலநேரங்களில் ஆணுறுப்பு சிறிதாவது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
ü இது என்ன காரணத்தால் ஏற்படுகிறது?
ü சரியான காரணம் அறியப்படாவிட்டாலும் , இது ஆணுறுப்பிலே ஏற்படும் காயங்கள் காரணமாக ஏற்படும் தழும்புகள் காரணமாகவே ஏற்படுவதாக சொல்லப் படுகிறது.
ü புகைப் பிடிப்பவர்களுக்கும் , நீரழிவு நோயாளிகளுக்கும் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று சொல்லப் படுகிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்?
இந்த நோய் இருக்கும் எல்லா ஆண்களிலும் இது வலியை ஏற்படுத்துவதில்லை. அதே போல வளைவு இருந்தாலும் இது எல்லோரிலும் உடலுறவுக்கு இடையூறாக இருப்பதும் இல்லை.
ஆகவே ஆணுறுப்பில் ஏற்படும் வளைவு காரணமாக உங்களுக்கு வலி ஏற்பட்டாலோ அல்லது அது உடலுறவுக்கு இடையூறாக இருந்தால் தயக்கமின்றி மருத்துவரை ஆலோசிக்கவும்..
உங்களுக்கு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ அல்லது வேறுவகையான பிரச்சனை இருந்தாலோ மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகர் மருத்துவர் செந்தில் குமாரை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==