குடைமிளகாய்:
குடைமிளகாய்
உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதை சமைக்கும் போது ஏற்படும் வாசனை ஒரு சிலருக்கு
பிடிப்பதில்லை. அதனால் வாங்குவதும் இல்லை.
ஆனால் இதில் எவ்வளவு சத்துக்கள்
இருக்கிறது
பாருங்கள்.....
- தக்காளி,
குடைமிளகாய், எலுமிச்சை
ஆகியவற்றில் வைட்டமின் 'சி'
(Vit C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
- உடல் எடையைக்
குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில்
கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால்,
சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
- குடமிளகாயில் உள்ள
விட்டமின் ஏ, சி,
ஈ, பி6
போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
- கண்பார்வையைச்
சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும்
குடமிளகாய் காக்கிறது என்பதை சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
- குடமிளகாயைச்
சமைக்கும் முன் நன்கு கழுவ வேண்டும்.
- குடமிளகாயைத்
துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது
ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.
- ஊசி மிளகாய்,
குடைமிளகாய், மிளகு ஆகியவை
உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப்
பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.
- காய்கறி சாலட்
அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ்,
வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட
வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு,
மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.
- குடைமிளகாயில்
நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து,
கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து,
கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
- வைட்டமின் சி 137
மி.கி., வைட்டமின் ஏ 427
மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம்,
பாஸ்பரஸ், இரும்புச் சத்து
ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம்.
மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==