சைனஸைட்டிஸ் நோய் குறித்து மருத்துவர். செந்தில்
குமார் அவர்களிடம் ஒரு நேர்காணல்.
சைனஸைட்டிஸ் என்றால் என்ன டாக்டர்?
மூக்கின் பக்கவாட்டிலும் மேற்புறத்திலும் உள்ள சைனஸ் அறைகளில் ஏற்படக்கூடிய வீக்கம் சைனசைட்டிஸ் எனப்படுகிறது.
சைனஸ் எதனால் வருகிறது டாக்டர்?
அடிக்கடி சளி பிடிப்பதால் மூக்கின் அருகிலும் புருவத்தின் பின்புறத்திலும் உள்ள சைனஸ் அறைகளில் சளி தங்கி நீர் போல மூக்கிலிருந்து வரலாம். சில நேரங்களில் கிருமி கலந்த சீழாக கூட மாறலாம்.
சைனஸ் பிரச்சினைக்கு பலவகையான நோய்க்கிருமிகள் தான் காரணம். இந்த கிருமிகள் காற்றின் வழியாகவே பெருமளவில் நம்மை தாக்குகிறது., உணவு மூலமாகவும் கிருமி நம்மை தொற்றி சளியை உண்டாக்கி விடுகிறது.
சிலர் தலைக்கு குளித்த பின்பு, தலையில் இருக்கும் ஈரத்தை காய வைக்காமல் இருப்பார்கள். இதனாலும் தலையில் நீர் கோர்த்து, அடிக்கடி வலி ஏற்படலாம்
சிலருக்கு மூக்கின் நடுவில் இருக்க வேண்டிய தடுப்புச்சுவர் -நேசல் செப்டம் சற்று வளைந்து இருக்கும், அந்தத் தடுப்புச் சுவர் சைனஸ் அறைகளின் மிக அருகே வளைந்து இருக்கும் பட்சத்தில் சைனஸ் அறையின் திறப்பை எப்போது வேண்டுமானாலும் அடைத்துவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.இதை டீவியேட்டட் நேசல் செப்டம் (Deviated Nasal Septum – DNS) என்பார்கள்.
சைனஸ் அறை வாசலில் ஏற்படும் சதை வளர்ச்சி நேசல் பாலிப் (Nasal Polyp) அடைப்புக்கான ஒரு காரணம்,.
அடுத்ததாக, தூசுகள் அதிகமுள்ள இடங்களில் இருக்கும்போது தூசுகளும் சில வேதிப் பொருட்களும் மூக்கினுள் போய் மென் சதையை தாக்கி பிரச்சினையை ஏற்படுத்தும்,
குழந்தைகளுக்கு அடினாய்டு சதை வளர்வதும் ஒரு காரணம்.
சைனஸ் அறைகள் என்றால் என்ன டாக்டர்?
முகத்தில் மூக்கின் முக்கிய பகுதியாக இருப்பது சைனஸ் அறைகள். இதை காற்றுப்பைகள் – கேவிட்டீஸ் - ஸ்பேஸஸ் என்றும் அழைக்கலாம். இதை மருத்துவர்கள் "பாரா நேசல் சைனைஸஸ்(Para
Nasal Sinuses) என்பார்கள்.. வலது இடது என மொத்தம் நான்கு ஜோடி சைனஸ் அறைகள் இருக்கின்றன.
நெற்றி பகுதியில் ஃபிரான்டல் சைனஸ் அறைகளும், அதற்கு சற்று கீழே `எத்தமாய்ட்' சைனஸ் அறைகளும், மூக்குக்கு பின்னால் ஸ்பீனாய்டு சைனஸ் அறைகளும் இருக்கிறது. முன்பக்கம் முக்கியமாக இருப்பது மேக்சிலரி சைனஸ் அறைகள்.
சைனஸின் பயன் மற்றும் செயல்பாடு என்ன டாக்டர்?
மூக்கின் அனைத்து செயல்பாட்டிற்கு துணையாக இருப்பதும், நாம் எழுப்பும் ஓசைக்கு சரியான ஒலி வடிவம் தருவதும் இந்த சைனஸ் அறைகளே.
ஒவ்வொரு சைனஸ் அறைக்கும் ஒரு திறப்பு இருக்கும். இது நாம் மூக்கின் வழியாக மூச்சு விடும்போது இதன் வழியாக சென்று நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்கும்.
சைனசைட்டிஸின் அறிகுறிகள் என்ன டாக்டர்?
பெரும்பாலானோர் நினைப்பது போல எல்லா ஜலதோஷமும் சைனசைட்டிஸ் ஆகிவிடாது. ஆனால் சைனசுக்கு ஜலதோஷம் தான் காரணமாக அமைகிறது.
சைனஸைட்டீஸ் ஒரு வாரத்திற்க்கு மேல் சளி பிடித்திருந்தால் இது கண்டிப்பாக சைனஸைட்டீஸாக இருக்கலாம்.
மூக்கில் மற்றும் வாயிலிருந்து ஒரு வித கெட்ட நாற்றம் வரும்,
வாசனையை உணரும் திறன் முற்றிலும் பாதிக்கப்டும்,
இரவில் இருமல் அதிகமாகும்,
ஒருவித அசதி இருந்துகொண்டே இருக்கும்,
முகத்திலும் புருவத்திலும் பாரத்துடன் கூடிய வலி இருக்கும்.
அடுக்கடுக்கான தும்மல் இருக்கலாம்.
தலையில் தண்ணீர் ஆடுவது போன்ற உணர்வு.
ஜுரம், தலைவலி, பல்வலி, கண்களுக்குள் வலி, முக்கடைப்பு, சளி, தொண்டை வலி மற்றும் மூச்சு விட சிரமப்படுதல்.
பழுப்பு நிறத்தில் கட்டியாக சளி வரும்.
மூக்கடைப்பு மாறி மாறி இரு துவாரங்களும் அடைக்கும். இரவில் எந்தப்பக்கம் படுத்தாலும் மூக்கு அடைத்துக் கொண்ட மாதிரி இருக்கும். இதனால் சுவாசிக்கவே சிரமமாக இருக்கும்.
வாசனை தெரியாது. வாசனை அறிய முடியாததால் ருசியையும் உணர முடியாது.
சைனஸைட்டீஸ் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் டாக்டர்?
அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவி துடைக்காமல் விடுவது, வெளியில் தூசு உள்ள இடங்களுக்கு போய் வந்தால் முகம் கழுவாமல் படுப்பது, ஏசி காற்று முகத்தில் படும்படி படுப்பது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
தலைக்கு குளித்தால் உடனே துவட்டி தலையை காயவிட வேண்டும்.
தலையில் ஈரத்துண்டு கட்டிக்கொண்டு இருக்கக்கூடாது.
அடிக்கடி சளி பிடித்தால் உடனே மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டமான இடத்தில் படுத்து உறங்க வேண்டும்.
ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருட்கள், ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன டாக்டர்?
நவீன மருத்துவத்தில் வலியைக்குறைக்கும் மருந்துகள், ஆண்டிபயாட்டிக் மருந்துகள், ஆண்டி அலர்ஜிக் மருந்துகள் முதலியவற்றை பரிந்துரைப்பார்கள். முற்றிய நிலையில் சைனஸ் டிரைனேஜ் எனப்படும் அறுவைசிகிச்சையை கூட மேற்கொள்வார்கள்.
ஹோமியோபதி மருத்துவத்தில் நோய் எதிர்ப்புதன்மையை அதிகப்படுத்தும் மருந்துகள் மற்றும் நோயின் அறிகுறிகளுக்கேற்ற மருந்துகள் பரிந்துரைப்பார்கள். ஹோமியோபதி மருத்துவத்தில் சைனசைட்டிஸ் நோய்க்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. அனுபவம் வாய்ந்த மருத்துவரிடம் சைனசைட்டிஸ் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவம் மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
பிரானாயமம் எனப்படும் மூச்சுப்பயிற்ச்சி நல்ல பலனலிக்கும்
ஸைனஸைட்டிஸ் நோய் சிகிச்சையில் உங்களின் மருத்துவ அனுபவங்களை கொஞ்சம் சொல்லுங்களேன்.
எனது பதினான்கு வருட மருத்துவ அனுபத்தில் நாள்பட்ட சைனசைட்டிஸ் மற்றும் ஆரம்பநிலை சைனசைட்டிஸ் தொந்தரவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள் பெண்கள் என பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளேன். நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கும்போது நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
உங்களை எங்கே சந்திக்கலாம் டாக்டர்?
எங்களுடைய
விவேகானந்தா கிளினிக் சென்னையிலும், பாண்டிச்சேரி மற்றும் பண்ருட்டியிலும்
இருக்கிறது. 9786901830 என்ற கைபேசி எண்னை தொடர்புகொண்டு முன்பதிவு பெற்று என்னை
சந்திக்கலாம்.