காதலா? இனக்கவர்ச்சியா?
இன்றைய கால
கட்டத்தில் பதிமூன்று வயதிலிருந்து பதினெட்டு வயது உடையவர்கள் கூட நான்
காதலிக்கிறேன் என்று
சொல்வது சர்வ
சாதாரனமாகிவிட்டது. ஆனால்
அது வெறும் இனக்கவர்ச்சி என்று
அவர்களுக்கு புரிவதில்லை. அவர்கள் காதலிக்கிறேன் என்று சொல்லும் நபர்கள் கூட
படிப்பவராகவோ, சினிமா நடிகரையோ, நெருங்கிய உறவினராகவோ, பக்கத்து வீட்டில் வசிப்பவராகவோ ஏன் பள்ளி
ஆசிரியராகவோ கூட
இருக்கலாம்.
இனக்கவர்ச்சி என்பது காரணமில்லாமல் அடுத்தவர் மீது உள்ள
ஈர்ப்பினால் ஏற்படும் ஒருவித உணர்ச்சியாகும், இதை காதல்
என்று இளம்பிராயத்தினர் தவறாக கருதுகிறார்கள். மேலும் அவர்களை திருமணம் செய்துகொண்டு வாழப்போவதாக கற்பனையும் செய்கிறார்கள்.
சில நேரங்களில் இவர் விரும்புபவர், இவரை காதலிக்கவில்லை என்றால் கூட
ஒருதலைபட்சமாக விரும்ப தொடங்குவார்கள்.
இனக்கவர்ச்சி ஏற்பட காரணம்
குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லை
என்றால் கூட
பருவக்கோளாறினால் ஏற்படும் மாற்றம், மற்றும் உடல் கவர்ச்சி, உணர்வுரீதியான ஒற்றுமை, அறிவுஜீவித்தனம் முதலியவை குறிப்பிட்ட காரணங்களாக கருதப்படுகிறது.
காதல் என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால்
அது 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு வரும்போது அது வெறும் இனக்கவர்ச்சியாகவே கருதப்படுகிறது. இதை
பொம்மைக்காதல் என்றும் அழைக்கலாம்.
இனக்கவர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி கண்டறிவது
(சில உளவியல் அறிகுறிகள்)
1-எதையோ பறிகொடுத்தவர்களை போல் காணப்படுவார்கள்.
2-சுலபமாக எதற்கெடுத்தாலும் அழுவார்கள்
3-எதிலும் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
4-குறிக்கோள் இல்லாமல் செயல்படுவார்கள்,
5-பேசிக்கொண்டிருக்கும் போதே
கவனத்தை எங்கோ
செலுத்துவார்கள்.
6-நினைவாற்றல் குறைபாடு
7-குடும்ப உறுப்பினர்களிடம் சகஜமாக பேசமாட்டார்கள்.
8-இரவில் தூக்கமின்மை, புரண்டு புரண்டு படுத்தல்.
9-பசி உணர்வின்மை, அல்லது கடமைக்கு சாப்பிடுதல்,
10-காரணமில்லாத உடல்
வலி,அசதி
மற்றும் சோர்வு,
11-மன அழுத்தம் & மன சோர்வு
12-காரணமில்லாமல் கோபப்படுதல்.
13-அளவுக்கு அதிகமான கவலை,
14-படபடப்பு மற்றும் நடுக்கம்
15-தொலைக்காட்சியில் காதல்
பாடல்களையோ சோக
பாடல்களையோ அதிகம் பார்த்தல்.
18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் அது இனக்கவர்ச்சியாக கூட இருக்கக்கூடும்.
இனக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு என்ன செய்யலாம்?
1-பெற்றோர்கள் தன்
பிள்ளைகளிடம் மனம்
விட்டு பேச
வேண்டும்.
2-அவர்களின் அன்றாட நடவடிக்கையில் மாறுதல் இருந்தால் பரிவுடன் பேசி என்ன பிரச்சினை என்று
அறிய வேண்டும்,
3-அட்வைஸ் செய்கிறேன் என்ற பெயரில் ஆளாளுக்கு அவர்களை அறுத்து தள்ளவோ அவர்களின் நடவடிக்கைகளை சந்தேகபடவோ கூடாது.
4-பொதுவக தினமும் செய்தித்தாள்களில் வரும்
காதல் சம்பந்தமான பிரச்சினைகளை பிள்ளைகளிடம் விவாதிக்கலாம்.
5-குடும்பத்தினரின் அதிகப்படியான அன்பும் ஆதரவும் அவர்களை நல்வழிபடுத்தும்.
6-அதிக நேரம்
அவர்களை தனிமையில் இருக்கவிடாதீர்கள்.
7.ஹார்மோன்கள் என்றால் என்ன? அவைகளின் வேலைகள் என்ன
என்பது போன்ற
அசைன்மெண்ட் கொடுங்கள். பிறகு ஹார்மோன்களின் செயல்பாடுகள் குறித்து மறைமுகமாக சொல்லிக்கொடுங்கள்.
8-. பிரச்சினை தொடரும் பட்சத்தில் உளவியல் நிபுணரின் ஆலோசனை பெறலாம்
9- இளம்பிராயத்தில் இனக்கவர்ச்சி ஏற்படுவதென்பது இயல்பு, அதை குற்ற
செயலாக்கி, அவர்களை குற்றவாளி ஆக்காதீர்கள்
மரு. த .செந்தில் குமார், B.H.M.S.,M.Phil(Psy)
ஹோமியோ மருத்துவர் & உளவியல் ஆலோசகர்,
தி “சைக்காலஜிஸ்ட்” உளவியல் ஆலோசனை மையம்
சென்னை: 9786901830
பாண்டிச்சேரி: 9865212055
பண்ருட்டி: 9443054168
9786901830
தி
“சைக்காலஜிஸ்ட்” உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்
==--==