கொழுப்பை குறைக்கும் நமது வீட்டு சமையலறை பொருட்கள்
எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவு வகைகள் கீழே:
மஞ்சள்: மஞ்சளை நாம் தினமும் உணவில் சேர்க்கும்போது, அதில் உள்ள குர்க்குமின் எனப்படும் ஒருவகை வேதிப்பொருள் கெட்ட கொழுப்பை கரைக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.அத்துடன் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்தம் உறைவதை தடுப்பதோடு இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
ஏலக்காய்: வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரித்து கரைக்க உதவுகிறது. மேலும் ஜீரணத்திற்கும் மிகச்சிறப்பான பங்காற்றுகிறது.
மிளகாய்: மிளகாய் சேர்க்கப்பட்ட உணவுகள், கொழுப்பை எரிப்பதாக கூறப்படுகிறது.அத்துடன் அது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுவதோடு, மிளகாயை சாப்பிட்ட 20 நிமிடங்களிலேயே கலோரிகளையும் எரிக்கிறது.
கறிவேப்பிலை: கறிவேப்பிலையை உங்களது உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொண்டால், அது உங்களது உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் நச்சு பொருட்களையும் அது வெளியேற்றிவிடுகிறது.நீங்கள் அதிக உடல் எடையுடன் இருந்தால் தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் போன்ற பானங்களுடன் அருந்தவோ அல்லது சாப்பாட்டுடன் சேர்த்து உண்ணவோ செய்யலாம்.
பூண்டு: கொழுப்பை கரைக்கும் சக்திவாய்ந்த உணவு வகைகளில் ஒன்று பூண்டு.இதில் உள்ள சல்பர் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுவதோடு கொழுப்பையும், ஊளை சதைகளையும் குறைக்கிறது.
கடுகு எண்ணெய்: மற்ற சமையல் எண்ணைகளுடன் ஒப்பிடுகையில் இது கொழுப்பு குறைந்த எண்ணை ஆகும். அத்தியாவசிய வைட்டமின்களை கொண்டுள்ள இது கொழுப்பை குறைப்பதோடு, இதயத்திற்கும் மிகவும் நல்லது.
உளுந்தம் பருப்பு: உளுந்தம் பருப்பில் வைட்டமின் ஏ,பி,சி, மற்றும் ஈ ஆகியவை ஏராளமாக உள்ளதோடு, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல தாதுக்களும் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு சத்து உடையது என்பதால் உடல் மெலிய பரிந்துரைக்கப்படும் உணவு வகைகளில் உளுந்தும் ஒன்று.மேலும் புரதம் மற்றும் நார்சத்தும் அதிகம் உள்ளதோடு, ரத்தத்திலும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
தேன்: உடல் பருமனுக்கு இது ஒரு வீட்டு வைத்தியமாகவே உபயோகப்படுகிறது.உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுவதோடு, வழக்கமான செயல்பாடுகளுக்கு தேவையான சக்திக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.தினமும் காலையில் 10 கிராம் அல்லது ஒரு மேஜைக்கரண்டி தேனை சுடு நீருடன் கலந்து அருந்தலாம்.
மோர்: உயிர் ஆகாரமாக கருதப்படும் மோர் இலேசான புளிப்பு சுவையுடையது. 8.9 கிராம் கொழுப்பும், 157 கலோரிகளும் கொண்ட பாலுடன் ஒப்பிடுகையில் இதில் வெறும் 2.2 கிராம் கொழுப்பும், 99 விழுக்காடு கலோரியும் உள்ளது. அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் கொண்ட மோரை தினமும் அருந்துவதால் உடல் எடை குறையும்.
சிறு தானியங்கள்: சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளதோடு, கொழுப்பை உறிஞ்சவும்,பித்த நீரை பிரிக்கவும் உதவுவதோடு, கொழுப்பை கரைக்கவும் செய்கிறது.
பட்டை, கிராம்பு: இந்திய சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் குளுகோஸ் அளவையும், கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==