Friday, May 17, 2013

உடலுறவின் போது விந்து வெளியேறுவதில்லை - மருத்துவ ஆலோசனை









கேள்வி: மதிப்பிற்குறிய மருத்துவருக்கு, எனக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என் மனைவியிடம் உடலுறவு கொள்ளும் பொழுது, எனக்கு விந்து வெளியேற்றவோ அல்லது உச்ச நிலையை அடையவோ முடிவதில்லை. ஏறக்குறைய முக்கால் மணி நேரம் முயன்றாலும், விந்து வெளியேறுவதில்லை. ஆனால் நான் சுய இன்பம் செய்தால் சில நிமிடங்களில் விந்து வெளியே வந்து விடுகிறது. இது என்ன விதமான நோய்? இதை எப்படி சரி செய்வது? மேலும் எனக்கு வேறு எந்த வித நோய்களும் இல்லை, உடற்பயிற்சி செய்து உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்.

பதில்: உங்களுக்கு தாமதமாக விந்து வெளியேறும் நிலை உள்ளது. இதற்கு  ஆங்கிலத்தில் Delayed Ejaculation என்று பெயர். ஒர் ஆணால் முப்பத்து நிமிடத்திற்கு மேலும் உடலுறவு செய்து, விந்து வெளியேறவில்லை என்றால் இந்த நோய் உள்ளதாக அர்த்தம்.

இந்த பிரச்சனைக்கு இரண்டு வித காரணங்கள் உண்டு. அவை மன ரீதி மற்றும் உடல் ரீதியானவை.

மன ரீதியான பிரச்சனைகள்:
  • துணையை உடலுறவு ரீதியாக திருப்தி படுத்த வேண்டுமே என்கிற பயம்.
  • உங்கள் மனைவியின் உடலமைப்பில் உங்களுக்கு திருப்தியின்மை.
  • தூக்கமின்மை.
  • துணைவியின் மீது உள்ள வெறுப்பு, கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகள்.
  • உடலுறவின் போது பொருளாதார, குடும்ப கவலை மற்றும் மன உளைச்சல்.
  • உங்களுக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளதாக எண்ணிக்கொள்வது..
  • உங்களுடைய ஆண் குறி சிறியதாக இருப்பதாக நினைத்துக் கொள்வது.
  • விரைப்புத்தண்மை குறைவாக உள்ளதாக நினைத்துக் கொள்வது.
  • மனதில் ஏற்பட்ட பாலியல் வடுக்கள் - Psychological Trauma.
  • சிறு வயதில் பெற்றோர்களால் உடலுறவு செய்வது தவறு என்று வலியுறுத்தப் படுவது, அல்லது மதம் சமயம் ரீதியாக காமம் ஒரு பாவ செயல் என்று மனதில் ஆழமாக பதிந்து விடுவது.
  • உங்கள் மனைவி உங்களிடம் எப்போதும் சண்டையிடுவது, அல்லது உங்களுடன் ஒத்துழைக்காமல் இருப்பது.

உடல் ரீதியான பிரச்சனைகள்:
இந்தப் பிரச்சனைக்கு உடல் ரீதியாக சில காரணங்களே உள்ளன. அவை.
Ø  வித்தியாசமான சுய இன்ப பழக்கம். உதாரணமாக நீங்கள் உங்கள் ஆண் குறியை தொடாமல், தலையனையை உரசியோ அல்லது வைப்ரேட்டர் மூலமாகவோ விந்துவை வெளியேற்ற முடியும். இந்த மாதிரி வித்தியாசமன முறையில் உங்களுக்கு சுய இன்ப பழக்கம் இருந்தால், உங்களுக்கு உடலுறவின்போது விந்து எளிதில் வராது. ஏனென்றால், உங்கள் சுய இன்ப முறை, சாதாரண உடலுறவு முறையிலிருந்து ரொம்ப வித்தியாசப்படுகிறது.
Ø  மது குடிப்பது, போதை பாக்கு உட்கொள்வது.
Ø  மற்ற நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகள் கூட இது போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக நீங்கள் மனநோய்க்காக சாப்பிடும் மருந்துகள் (Psychiatry Medicines) இந்த மாதிரி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
Ø  உடலுறவுக்கு முன் அதிகமாக சுய இன்பம் செய்தல். உடலுறவுக்கு முன்னால் சுய இன்பம் செய்து விட்டுப் போனால் இப்படி ஆக வாய்ப்புண்டு.
Ø  சுய இன்பத்திற்கு அடிமையாவதால் சாதாரன உடலுறவில் ஈடுபாடு குறைந்து விந்து வெளியேறாமல் போதல்.
Ø  நரம்புத் தளர்ச்சி மற்றும் நரம்பு ரீதியான நோய்களாலும் விந்து வெளியேறத் தாமதப் படலாம்.


மனப் பிரச்சனையா? உடல் பிரச்சனையா?
இந்த பிரச்சனைக்கு காரணம் உடல் ரீதியான விஷயம் என்றால், ஒரு சிறப்பு மருத்துவரை அணுகி, உங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

இதற்கு ஒரு மன ரீதியான காரணம் இருந்தால், உடனே ஒரு Psychologist & Sex Educator  அணுகுங்கள். அவர் சரியான காரணத்தை கண்டறிந்து பிரச்சனையிலிருந்து விடுபட வழிவகை செய்வார்.

உங்களுக்கு விந்து வெளியேறுவதில் தாமதமிருந்தாலோ அல்லது வேறுவகையான பிரச்சனை இருந்தாலோ சிறப்பு மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகர் மருத்துவர் செந்தில் குமாரை தயக்கமின்றி தொடர்புகொண்டு சிகிச்சை பெறவும்.




விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line



==--==

Please Contact for Appointment