எயிட்ஸ் பற்றிய பொதுவான சில கேள்வியும் பதிலும்.
கேள்வி: முத்தமிடுவதன் மூலம் எயிட்ஸ் பரவுமா?
பதில்: உமிழ் நீரில் ஹெச்.ஐ.வி வைரசின் அளவு மிகவும் குறைவு . இதன் மூலம் எயிட்ஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும் உதட்டோடு உதடு (Lip to Lip) முத்தம் கொடுக்கும் போது ஒருவருக்கு வாய்க்குள்ளே காயங்களோ சிறிய ரத்தக் கசிவுகளோ இருந்தால் எயிட்ஸ் பரவலாம்.
கேள்வி: வாய்வழிப் புனர்ச்சியால் (Oral Sex) எயிட்ஸ் பரவுமா?
பதில்: நிச்சயமாக. ஆனால் பரவும் சதவீதம் குறைவு.
கேள்வி:
எயிட்ஸ் நோய் உள்ளவர்களோடு சேர்ந்து விளையாடலாமா?
பதில்: நிச்சயமாக விளையாடலாம். உடலுறவு, இரத்தம் சம்பந்தமில்லாத எந்த விதத்திலும் எயிட்ஸ் நோயாளியோடு நீங்கள் பழகலாம்.
கேள்வி: எயிட்ஸ் நோய்க்கு மருந்துகள் உள்ளனவா?
பதில்: ஆம். இதை பூரணமாக குணமாக்க முடியாவிட்டாலும் வாழ்க்கைக் காலத்ததை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்தவும், இந்த மருந்துகள் உதவும்.
கேள்வி: இரத்தம் ஏற்றுவதன் மூலம் எயிட்ஸ் பரவுமா?
பதில்: ஆம். ஆனாலும் இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்பே இரத்தம் ஏற்றப்படுவதால் பயப்பட வேண்டியதில்லை.
கேள்வி: ஓரினச் சேர்க்கை (Homo Sex) மூலம் எயிட்ஸ் பரவலாமா?
பதில்: ஆம். ஓரினச் சேர்க்கையால் எயிட்ஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
கேள்வி: சலூனில் தலைமுடி வெட்டிக்கொள்ளும் போதோ ஷேவிங் செய்து கொள்ளும் போதோ (Hair Cut &
Shaving) எயிட்ஸ் தொற்றுமா?
பதில்: ஒரு பிளேடை பல பேருக்கு உபயோகப்படுத்தும்போது தவறுதலாக சிறிய வெட்டு காயங்கள் ஏற்பட்டால் எயிட்ஸ் தொற்றலாம்.
நீங்கள் தலைமுடி வெட்டிக்கொள்ளும் போது உங்களுக்காக புது பிளேடு போடப்படுகிறதா, என்பதை கண்கானியுங்கள்.
கேள்வி: பச்சை குத்திக்கொள்வதால் (Tattoo) எயிட்ஸ் தொற்றுமா ?
பதில்: ஆம். ஒரு ஊசி பல பேருக்கு உபயோகப்படுத்துவதால் எய்ட்ஸ் தொற்ற சந்தர்ப்பம் உள்ளது.
கேள்வி: எயிட்ஸ் நோயாளி தாய்ப்பால் (Breast Feeding) கொடுக்கலாமா?
பதில்: கூடாது.
உங்களுக்கு எய்ட்ஸ் நோய் பற்றி
சந்தேகமிருந்தாலோ அல்லது வேறுவகையான பிரச்சனை இருந்தாலோ சிறப்பு மருத்துவர் மற்றும் மன நல ஆலோசகரை தயக்கமின்றி தொடர்புகொண்டு ஆலோசனை பெறவும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==