குரலின் மகிமை
ü 12- வயது வரை ஆண், பெண்
இருபாலருக்கும் பெண் குரல்போல்தான் இருக்கும்.
ü மழலை
என்பது பெண் குரல்தான்.
ü 13-14 வயதில் ஆண்களின் குரல் நாண் நீளமடையும். அப்போது குரல்வளை
விரிவடைந்து, குரல்வளையில்
உள்ள ஒரு குருத்தெலும்பு தள்ளிக்கொண்டு வெளியே வரும். ஆண்களின் தொண்டையில் வெளிப்படையாக
நீண்டுகொண்டிருக்கும் இது "ஆடம்ஸ் ஆப்பிள்" எனப்படுகிறது.
ü பெண்களுக்கு
குரல் நாண் நீளவும் செய்யாது. விரிவடையவும் செய்யாது.
ü 16- வயதிற்குப் பிறகும் ஆண்களுக்கு பெண் குரல் இருந்தால் அது
"பியூபர் போனியா" என்ற கோளாறாக கருதப்படுகிறது. இதற்கு குரல் நாணை
இழுக்கும் சிகிச்சை தேவை. ஒரு நாளில் இந்த சிகிச்சையை செய்துவிடலாம் என்றாலும், தொடர்ந்து மூன்று மாதங்கள் "ஸ்பீச் தெரபி"
அல்லது "வாய்ஸ் தெரபி" பயிற்சி பெற வேண்டும்.
ü இறைவன்
கொடுத்த வரத்தில் ஒன்று குரல். கைரேகையில் தனித்தன்மை இருப்பது போல் ஒவ்வொருவரின்
குரலிலும் அடையாளம் காணும் அளவிற்கு தனித்தன்மை இருக்கும்.
குரலில்
மாற்றம் ஏற்பட காரணங்கள்
Ø ஒவ்வாமை, அழற்சி - வீக்கம், உணவுக் குழாயில் அமிலம் உருவாதல்,
Ø குரல்வளையில்
கட்டி உருவாதல்,
Ø குரல்வளையில்
புற்று நோய் ஏற்படுதல்,
Ø குரல்வளை
நரம்பு அனுக்களில் மாற்றம் ஏற்படுதல்,
Ø மனரீதியான
பாதிப்பு,
Ø பிறவி
நோய் குறைபாடுகள்,
Ø தைராய்டு,
Ø குரல்வளை
வாதம்,
Ø நரம்பு
தளர்ச்சி
Ø போதை
பாக்கு மெல்லுதல்.
Ø காசநோய் மற்றும் தொண்டையில் ஏற்படும் தொற்றுநோய்கள்.
போன்றவைகளால் குரல் மாற்றம் ஏற்படலாம்.
குரல் மாற்றம் - உடல் பரிசோதனைகள்
குரல்வளையில்- குரலில் பாதிப்பு ஏற்படும்போது அந்த
பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
·
நோயாளியின் முழு உடல்
பிரச்சினைகளையும் கேட்டறிதல்,
·
ரத்த பரிசோதனை,
·
தொண்டைச் சளி பரிசோதனை,
·
குரல் பரிசோதனை,
·
எக்ஸ்-ரே,
·
எண்டோஸ்கோப்
·
ஸ்கேன்
போன்றவைகளில் தேவைப்படுபம் பரிசோதனைகளை செய்து பாதிப்பைக்
கண்டறிந்து முறையான மருந்துவம் மேற்கொண்டால் நலம் பெறலாம்.
குரலைத்
பாதுகாக்க கவனிக்க...
ü பேசுவதற்கு
முன்பு காபி, மது
போன்றவைகளை அருந்தக்கூடாது.
ü உடலுக்கு
ஒத்துக்கொண்டால் எலுமிச்சை சாறு அருந்தலாம்.
ü தொடர்ந்து
பேசுபவர்களுக்கு உமிழ்நீர் நன்றாக சுரத்தல் அவசியம். அதற்கு அவர்கள் தினமும் 4 லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.
ü புகை
பிடிக்கக்கூடாது.
ü மசாலா
உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ü சாக்லேட்
சாப்பிடக்கூடாது.
ü பால், ஐஸ்கிரீம் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும்.
ü ஆசிரியர்கள்
பாடம் நடத்தும் வகுப்பறைகள் ஈரப்பதமாக இருக்கவேண்டும்.
ü பாடம்
சொல்லிக் கொடுக்கும்போது, தொண்டையை
சரி செய்வதாக நினைத்துக்கொண்டு அடிக்கடி கனைக்கக்கூடாது.
ü போனிலும், வீட்டிலும் கத்திப் பேசக்கூடாது.
ü செல்போனில்
பேசும் நேரத்தை பெருமளவு குறைக்க வேண்டும்.
ü சத்தமுள்ள
இடத்தில் நின்று கொண்டு பேசக்கூடாது.
ü சாப்பிடும்போது
பேசக்கூடாது. பேசும்போது சாப்பிடவும் கூடாது.
ü பேசுவதில்
சிரமமோ, சோர்வோ
ஏற்பட்டால் உடலின் உள் உறுப்புகளுக்கும், வெளி
உறுப்புகளுக்கும் பயிற்சி தேவைப்படும். சிகிச்சையும் தேவைப்படும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line
==--==