கேள்வி: என் பிறப்பு உறுப்பு பகுதியிலும் அங்குள்ள முடியிலும் நிறைய சிறிய சிறிய
பேன்கள் இருக்கின்றன.
நிறைய இருப்பதால், எல்லாவற்றையும்
எடுக்க முடியவில்லை. இதனால் என்
பிறப்பு உறுப்பு பகுதியில் தாங்க முடியாத அரிப்பு ஏற்படுகிறது..
இது எதனால் வருகிறது? இதற்கு தீர்வு என்ன?
பதில்: “பாலுறுப்புப்
பேன்” - Pubic Lice என்ற ஒரு வகை ஒட்டுண்ணி உங்களை தாக்கியுள்ளது.
இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாக தொற்றுகின்றன. இவற்றை
மூன்று நிலையாக பிரிக்கலாம். முதிர்பேன் (Adult) இளம்பேன் (Nymph) மற்றும்
ஈர் (Nits). முதிர்ந்த பெண் பேன், ஈர்
அல்லது முட்டைகளை பாலுறுப்பில் உள்ள முடியிலோ அல்லது
தோலிலோ இட்டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள்
இளம்பேனாக வளர்ந்துவிடும்.
பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில்தான்
இவை உயிர் வாழ முடியும். இவை, தலை
முடியில் வாழாது.
பாலுறுப்புப் பேன் பரவும் வழிகள்:
Ø
இது பெரும்பாலும் பாலுறுப்புப்பேன்
உள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு கொள்வதால்தான் தொற்றுகிறது.
Ø
இந்தப் பேன்கள் உள்ளவர்களுடன்
உடைகள், டவல், போன்றவற்றை
பகிர்ந்து கொள்வதால் தொற்றும்.
Ø
இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் படுக்கையில்
படுப்பதால் தொற்றும்.
Ø
இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளின்
உடம்பில் வாழாது, அதனால்
விலங்குகள் மூலமாக இது பரவாது.
Ø
பாலுறுப்புப்பேன் உள்ளவர்களின்
வேர்வை, அல்லது அவர்களுடன்
நெருங்கி பழகுவதாலும் பாலுறுப்புப் பேன் தொற்றிக் கொள்ளக் கூடும். மிகவும்
அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படலாம்.
பாதிப்புகள்:
இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைத் தவிர வேறு எந்த வியாதியையும் உண்டாக்காது. பிறப்புறுப்பை சுற்றியும் ஆசன வாயிலும் தாங்கமுடியாத அரிப்பு ஏற்படலாம், சொரிந்து தடிப்போ புண்ணோ கூட ஏற்படலாம்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பேனுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.
இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்கள் இருக்க அதிகமான
வாய்ப்பு உள்ளது.
சிகிச்சை:
மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்துகள் உட்கொள்வதோ சுய சிகிச்சை மேற்கொள்வதோ நல்லதல்ல. தகுந்த மருத்துவ சிகிச்சை மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். எனவே தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையை தயக்கமின்றி பெறுவது பிரச்சினையிலிருந்து விடுபட உதவும்.
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை
அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line