Wednesday, March 20, 2013

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு






கேள்வி: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் உணவு வகைகள் எவை? 15 வருடங்களாக இரத்த அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுகிறேன். சர்க்கரை வியாதியை சிறு குறிஞ்சான் இலை மூலம் குணப்படுத்தி  விட்டேன். அப்படி இரத்த அழுத்தத்திற்கும் ஏதாவது நிவாரணி கிடைக்குமா?

பதில்
முதலில் நீங்கள் சிறு குறிஞ்சான் இலை மூலம் சர்க்கரை வியாதியை குணப்படுத்தி விட்டதாக சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. சில ஆய்வுகளின் அடிப்படையில் சர்க்கரை வியாதிக்கு சிறு குறிஞ்சான் இலை நல்ல உணவு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

v  ஆனாலும் சிறு குறிஞ்சான் இலை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் மருந்து என்று எந்த மருத்துவத்திலும் குறிப்பிடப்படவில்லை.  இதுவரை நாட்பட்ட சர்க்கரை வியாதியைக் பூரணமாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை.

v  இன்சுலின் உட்பட அனைத்து மருந்துகளும் நாட்பட்ட நீரழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடாமல் கட்டுப் பாட்டில் வைத்திருக்கவே பயன்படுத்தப்படுகிறது.

v  அதாவது சர்க்கரை வியாதிக்கு மாத்திரை உட்கொள்பவர்கள் ஆயுசு முழுவதும் மாத்திரையை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப் பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

v  அதை கட்டுப் பாட்டில் வைத்திருக்க குறிஞ்சான் இலை மிகவும் உகந்தது என்றாலும் அதனால் உங்கள் நோய் பூரணமாக குணமாகி விட்டதாக் எண்ணி அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு
உயர் இரத்த அழுத்தம் ( Hyper Tension/ High Blood Pressure) கொண்டவர்கள் , அதன் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ü  உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப் பாட்டில் வைத்திருக்கவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கவும்  வேண்டுமானால் அவர்கள் மருந்துகளோடு சரியான உணவுப் மற்றும் வாழ்கை முறைப் பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

ü  புகைத்தல் முற்றாக நிறுத்தப் பட வேண்டும். சாதாரனமானவர்களில் கூட புகைத்தலின் பின்பு இதயத் துடிப்பு வீதம் அதிகரிக்கும்இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ü  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் புகைத்தால் அவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் பல மடங்கு அதிகரிக்கின்றது.

ü  அதிகம் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ü  பொட்டாசியம் அதிகம் கொண்ட வாழைப்பழம், உருளைக் கிழங்கு, கொய்யாபோன்றவரை உட்கொள்ள வேண்டும்.

ü  பழங்கள் , மரக்கறி வகைகள், கடலை வகை, நார் சத்து உணவுகள், கொழுப்பு குறைந்த பால் வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள  வேண்டும்.

ü  மதுவின் அளவை குறைக்க வேண்டும்.

ü  உடல் எடையை கட்டுப் பாடாக வைக்க வேண்டும்.

ü  உடற்பயிற்சி, நடை பயிற்சி மிக முக்கியம்.






மேலும் விபரங்களுக்கு மருத்துவரை தொடர்புகொள்க. 



விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment